'உங்க பொண்ண கெடுக்காதீங்க' - மகளுடன் வீடியோ வெளியிட்ட பாலாஜி மனைவிக்கு ரசிகர்கள் அட்வைஸ்.

By Ajju · 8/1/2022

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தான் நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது. பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது. இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். பிக் பாஸ் சீசன் இறுதியில் கமலஹாசன் முன்னிலையில் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். தற்போது நித்யா மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

பாலாஜியை பிரிந்த நித்யா :

கொரோனா காரணமாக பள்ளிகள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் கொஞ்சம் சிரமப்பட்டு தான் வருகிறார். ஏற்கனவே நித்யா ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் பணிபுரிந்தவர். அதற்கு பிறகு ஒரு பிரபலமான மருத்துவமனையில் எச்.ஆர்.அதிகாரியாக இருந்தவர். பாலாஜியை கல்யாணம் செய்த பிறகு தான் அந்த வேலையிலிருந்து விலகி விட்டார். கணவரை விட்டு பிரிந்தாலும் தன்னுடைய சொந்தக் காலில் நின்று தன் குழந்தையை காப்பாற்றி வருகிறார் நித்யா.

பிரிந்து வாழ்ந்தும் தீர்த்த பிரச்சனைகள் :

பாலாஜியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வெடித்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

தன் மகள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாலாஜி :

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த பாலாஜி, காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் என்றும் கூறி இருந்தார். மேலும், உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் தனது மனைவி நித்யா ஆகியோரால் தனது குழந்தை போஷிகாவிற்கு ஆபத்து உள்ளதாக பாலாஜி குற்றம் சாட்டி இருந்தார் பாலாஜி.

நித்யாவிற்கு ரசிகர்கள் அட்வைஸ் :

இவர்களுடைய குடும்ப பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது பெயரை தேஜு என்றும் மாற்றிக்கொண்டார். பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளாமல் ஆளே மாறியுள்ளார். சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன் மகளுடன் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன் மகளுடன் இவர் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலர் '' என்று நித்யாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full