விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 82 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

டாப் 10ல் வந்த தாமரை :

இந்த சீசனில் தான் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புது முக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர். இவர் மேடை நாடக கலைஞர். மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்த தற்போது டாப் 10 போட்டியாளர்களின் ஒருவராக வந்து இருப்பது பாராட்டாக்கூடிய ஒன்று தான்.

Advertisement

மேடை கலைஞர் To பிக் பாஸ் மேடை :

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தனர். அந்த வகையில் இந்த டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கூறியிருந்தார். வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்துவிட்டுள்ளனர்.

முதல் கணவார்கள் ஏற்பட்ட சோகம் :

அதன் பின்னர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்கள். அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை. பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார்.அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே தாமரை செல்வி வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் இவர் தனது பிள்ளைகளுக்காக தான் நாடகத்தில் நடித்து வருகிறார் என்று கூறி இருந்தார்.

Advertisement

தாமரை செல்வி மாமியார் :

மேலும், தாமரை செல்வி தான் காதலித்து திருமணம் செய்ததாகவும் அவருடைய மாமியார் தன்னை மகள் போல் பார்த்து கொள்ளுவதாகவும் பேசியிருந்தார். தாமரையின் இந்த பேச்சை கண்டுவிட்டு பேட்டி ஒன்றில் பேசிய தாமரையின் மாமியார், ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இவர்கள் வெளியே போய் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பிறகு நான் ஏற்றுக்கொண்டேன். தாமரை ரொம்ப நல்ல பிள்ளை ரொம்ப தங்கமான பொண்ணு என்று அப்புறம் தான் எனக்கு தெரிந்தது.

Advertisement

ஜவுளி கடையில் வேலை பார்க்கும் கணவர் :

தாமரையின் கணவரும் தங்கள் காதல் திருமணம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் சில உணர்வு பூர்வமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். மேலும், இவர் ஒரு ஜவுளி கடையில் தான் வேலை பார்த்து வருகிறார். அந்த பேட்டியில் பேசிய அவர்கள் கண்டிப்பாக தாமரைச்செல்வி வெற்றி பெற்று வருவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தாமரைச்செல்வியின்கணவரும் மாமியாரும் கூறியிருந்தார்கள்.

Advertisement