பிக்பாஸ் தர்ஷன் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம், நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?

By subhashini · 30/4/2025

பிக் பாஸ் தர்ஷன் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அளித்து இருக்கும் தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தர்ஷன். கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் தர்ஷன் பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு இருக்கிறது. சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார் தர்ஷன். இவருடைய வீட்டிற்கு முன்பு நீதிபதியின் மகன் காரை நிறுத்தி இருந்ததால் கோபத்தில் தர்ஷன் கேள்வி கேட்டு இருந்தார்.

பின் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கை கலப்பு ஆகி இருந்தது. இதனால் நீதிபதியின் மகன், அவருடைய மனைவி, மாமியாரை தாக்கி இருப்பதாக கூறப்பட்டது. இதை அடுத்து நீதிபதியின் மகன் அவருடைய மனைவி, மாமியார் ஆகியோரை தாக்கியதால் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது தர்ஷனை ஜே ஜே நகர் போலீசார் கைது செய்து இருந்தார்கள்.

பார்க்கிங் விவகாரம்:

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தர்ஷன் சொன்னது, என் வீட்டின் முன் நீதிபதி மகன் கார் நிறுத்தி வைத்து இருந்தார். இதனால் நான் ரோட்டிலேயே 20 நிமிடங்களுக்கு மேல் நின்று இருந்தேன். வீட்டிற்கு என் உறவினர்கள் வந்திருக்கிறார்களா? என்று விசாரித்தேன். ஆனால், என் வீட்டுக்கு யாரும் வரவில்லை. அதற்குப் பின் வந்த அந்த காரின் உரிமையாளர், நீ பிக் பாஸ் போன பெரிய ஆளா? உன்னால் கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா? என்று சொன்னார். பின் என் தம்பியின் மீது சூடான டீயை ஊற்றினான்.

https://www.youtube.com/watch?v=UuiGWZweWP4

தர்ஷன் சர்ச்சை:

இதைப் பற்றி கேட்டதற்கு நான் ஜட்ஜ் பையனடா, உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டு என்னுடைய தம்பி மீது அமர்ந்து அவரை தாக்க முயற்சித்து இருக்கிறார். அதோடு நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவருடைய மனைவி, மாமியார் எல்லோருமே எங்களை சேர்ந்து தாக்கி இருந்தார்கள். இது இங்கிருக்கும் அனைவருக்குமே தெரியும். இவர்கள் இந்த பிரச்சனையை இதோடு விடாமல் என் அக்காவை அழைத்து அவரை ரொம்ப அசிங்கமாக பேசி இருந்தார்கள். பின் நீதிபதி பையன் போலீசில் எங்கள் மீது புகார் கொடுத்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=vLD4Nz8ayok

தர்ஷன் கைது:

பதிலுக்கு நான் 100க்கு போன் செய்தேன். ஆனால், அவர்கள் சரியான ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று வேதனையுடன் அழுது இருந்தார். மேலும், இந்த சண்டையில் ஜட்ஜ் பையனையும், மனைவி மாமியாரை எல்லாம் தர்ஷன் மற்றும் அவருடைய நண்பர் தாக்கி தாக்கியதாக சொல்லி போலீசில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். இதற்கு பலருமே கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

தர்ஷன் வழக்கு தீர்ப்பு:

இதை அடுத்து தர்சனை போலீஸ் கைது இரு ந்தார்கள். மேலும், ஒரு வாரம் சிறையில் இருந்த பிறகு தர்ஷன் ஜாமினில் வெளியே வந்தார். இப்படி இருக்கும் நிலையில் தர்ஷன் வழக்கு தொடர்பான தகவல் தான் அப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் இருவருமே வழக்கை சமரசம் செய்து இருக்கிறார்கள். அதனால் இரண்டு தரப்பின் வழக்குகளையுமே நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full