சாத்தான்குளம் தந்தை மகன் மரணம். நியாயம் கிடைக்க இதை செய்யுங்கள் என சனம் ஷெட்டி வைத்த வேண்டுகொள்.

By Rajkumar · 27/6/2020

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகம் முழுவதும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31). இவர்கள் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை வைத்திருக்கிறார்கள். ஜெயராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்து வைத்துள்ளார். இதனால் காவல் துறை அதிகாரி ஜெயராஜ் இடம் விசாரித்து உள்ளார். அப்போது காவல்துறையினருக்கும், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

https://www.instagram.com/p/CB5HU5Php9G

இதையடுத்து காவல்துறையினர் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தந்தை மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கி உள்ளனர். இரவு முழுவதும் அவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உள்ளனர் போலீஸ். காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. அது மட்டும் அல்லாமல் ஆசனவாயில் லத்தியை வைத்து அடித்து துன்புறுத்தியதாக செய்திகள் வந்தது.

பின் இவர்கள் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து உள்ளனர். ஆனால், இருவருமே சிகிக்சை பலனின்றி தந்தை, மகன் அநியாயமாக மரணமடைந்தார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை, மகன் மரணத்திற்கு பலரும் சோசியல் மீடியாவில் காவல் துறை மீது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி மேல் புகார் அளித்து போராட்டத்தில் இறங்கினார்கள்.

https://www.instagram.com/p/CB7dnU9h7DJ/

இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். தற்பொழுது பிக்பாஸ் புகழ் தர்சனின் முன்னாள் காதலியான நடிகை சனம் ஷெட்டி இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்ததை SCREENSHOT எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full