தர்ஷன் பிறந்தநாளுக்கு அவரது காதலி அனுப்பிய பரிசு.! முடியாது என்று சொன்ன விஜய் டிவி.!

By Rajkumar · 16/9/2019

பிக் பாஸ் தர்ஷனுக்கு சனம் ஷெட்டி காதலிக்கிறார் என்பதே கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தெரியவந்தது. சனம் ஷெட்டி, தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால், அவரிடம் இருந்து பட்டம் பறிக்கப்பட்ட நிலையில் அதே போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இவரிடம் தான் அந்த பட்டம் கொடுக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஷெரின் மற்றும் வனிதாவுக்கு தர்ஷன் விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய வனிதாதர்ஷனுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலி இருக்கிறார். அப்படி இருந்தும் நீ அவனிடம் மிகவும் நெருக்கமாக பழகினாள் அதற்கு கள்ளத்தொடர்பு என்று தான் பெயர் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான சரி எனக்கு வெறும் நண்பர் மட்டும்தான் அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் ரம்யா.! புகைப்படம் இதோ.!

ஆனால், தர்ஷன் மற்றும் ஷெரின் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க அழுதுள்ளார் சனம் ஷெட்டி, அந்த வீடியோவில் என்னால் தர்ஷினின் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்காது. அப்படி இருந்தால் நான் தர்ஷனிடம் இருந்து விலகி விடுகிறேன் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் தர்ஷனுக்கு தொடர்ந்து தனது ஆதரவை அளித்து வருகிறார் சனம் ஷெட்டி.

https://www.instagram.com/p/B2ZvByEh0BO/

https://www.instagram.com/p/B2cQaYghIzd/

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். மேலும், தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி தர்ஷனின் பிறந்தநாளை‘காக்கும் கரங்கள்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி தர்ஷனின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை தர்ஷனுக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்க நினைத்து விஜய் டிவிக்கு அனுப்பி ஒளிபரப்புமாறுகேட்டுள்ளார் , அவர்கள் இந்த வீடியோவில் நான் இருப்பதால் ஒளிபரப்ப மறுத்துவிட்டனர் என்று வருத்தப்பட்டுள்ளார் சனம் ஷெட்டி. குழந்தைகளுடனான பிறந்தநாள் கொண்டாட்டத்தை தர்ஷன் மிஸ் செய்துவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார் சனம் ஷெட்டி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full