தர்ஷனை சந்திக்க கிளம்பிய அவரது தங்கை மற்றும் தாய்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

By Rajkumar · 10/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் Freeze டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரபடுவார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாக போட்டியாளர்கள் அசையாமல் நின்ற இடத்தில் நிற்க வைத்துவிடுவார்கள்.

அந்த சமயத்தில் யாருடைய உறவினர் வருகிறார்களோ அவரை ரிலீஸ் செய்வதர்க்கு முன்பாக மற்ற போட்டியாளர்களை ரிலீஸ் செய்வார்கள். இந்த பின்னர் இறுதியில் அந்த குறிப்பிட்ட போட்டியாளரை ரிலீஸ் செய்வார்கள். ஒரு சில நேரத்தில் அந்த போட்டியாளரின் உறவினர்கள் வெளியே செல்லும் வரை கூட ரிலீஸை அறிவிப்பாமலே இருப்பார் பிக் பாஸ்.

இந்த டாஸ்க் எப்போதும் பார்வையாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் கொஞ்சம் ஸ்வாரஸ்யமானதாகவே இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் இந்த வாரம் freeze டாஸ்க் நடத்தபட இருப்பதாக இன்றைய ப்ரோமோ மூலம் தெரியவந்தது. அதில் முகென் அம்மா மற்றும் தங்கை வந்திருந்தனர்.

இந்த நிலையில் தர்ஷனை சந்திக்க தர்சனின் தாய் மற்றும் தங்கை இலங்கையில் இருந்து கிளம்பியுள்ளர். மேலும், இவர்கள் இருவரும் விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full