தப்பித்த மாயா,வினுஷா,அக்ஷ்யா - யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் வெளியேறிய நபர். இனி கன்டன்டுக்கு பஞ்சம் தான்.

By Rajkumar · 21/10/2023

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறி இருக்கும் நபர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள் அன்று நிறைவடைந்து இருந்தது. அதில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் வர்மா இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க் ஒன்றில் அனைவரும் ஆக்ரோசமுடன் ஆடினார்கள். ஆனால், விஜய் வர்மா மற்றவர்களை கடுமையாக தாக்கி விளையாடினார். எதோ அதிலும் பிரதீப்பை WWFல் தூக்கி போடுவது போல தூக்கி போட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதீப் மற்றும் விஜய் வர்மா இருவருக்கும் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது. இப்படி ஒரு நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு மனஸ்தாபமுடைய போட்டியாளர்கள் பற்றி பேசினர்.

அப்போது விஜய் வர்மா பேசுகையில் ‘பிரதீப் என் மீது ஷூவை இடித்துவிட்டு போனார். எனக்கு திடீரென்று கோபம் வந்து நான் கையை ஓங்கினால் ‘மூக்கு வாய் எல்லாம் உடைந்துவிடும். என் மீது பாசம் பசங்க எல்லாம் வெளியில் இருக்கிறார்கள். நீ வெளியில் போனால் ஏதாவது பண்ணிவிடுவார்கள் என்று மிரட்டினார். இந்த விஷயம் தொடர்பாக பவா செல்லத்துரை உட்பட அனைவரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும், ரசிகர்கள் கூட இப்படி அடாவடியாக மிரட்டும் தோனியில் பேசும் விஜய் வர்மாவை ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து கமல் பேசிய போது விஜய் வர்மா இப்படி நடந்துகொண்டதற்காக அவருக்கு Yellow Card வழங்கப்படுகிறது. அவர் இதே போல இன்னும் இரண்டு முறை Yellow Card வாங்கனால் அவர் நேரடியாக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் கூறி இருந்தார்.

கமல் இப்படி கூறியதில் இருந்தே விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் அடக்கி தான் வசித்து வந்தார். கடந்த வாரம் முழுக்க அவர் இருந்த இடம் தெறியாமல் தான் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டாஸ்க்கில் விஜய் வர்மா மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். அதிலும் குறிப்பாக பிரதீப்பை எதோ WWFல் தூக்கி போடுவது போல தூக்கி போட்டார்.

https://twitter.com/itzSekar/status/1714965262414610800

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து விஜய் வர்மாவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் கூறி வந்தனர். ஏற்கனவே விஜய் வர்மா ஒரு yellow card வாங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் கமல் கண்டிப்பாக அவருக்கு மேலும் ஒரு Yellow Cardஐ வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full