Ticket To Finale டாஸ்க்ல ஸ்டார்ட் மியூசிக்ல வந்த டாஸ்க்க நடத்திட்டு இருகாங்க.

By Rajkumar · 5/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=4mHjzFDCHLY&feature=youtu.be

தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இன்னும் கோல்டன் டிக்கெட் டாஸ்க்கும் நடைபெறாமல் தான் இருக்கிறது. அதே போல இந்த வாரம் பணப்பெட்டி சலுகை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரமான ஆரி மற்றும் பாலாஜி சண்டை தான் பரபரப்பாக சென்றது.

இது ஒருபுறம் கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் ஆஜீத், ரியோ, சோம் ஆகிய மூன்று பேர் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்கள் மூவருக்கும் நடைபெற்ற கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் ரியோ வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனவே, இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருப்பதால் ரியோ நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வாரம் என்பதால் அவரும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்.

அதே போல இறுதி வாரம் என்பதால் Ticket To Finale Task கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்றய நிகழ்ச்சியில் இரண்டு டாஸ்க் நிறைவடைந்த நிலையில் பாலா மற்றும் ஆரி இருவருமே சமமான புள்ளிகளில் இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full