Ticket To Finale இறுதி டாஸ்க்கில் பாதியிலேயே வெளியேறிய பாலா - காரணம் இவரு தான்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.
https://twitter.com/VijayMusicOffl/status/1347521098561200132
தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. கடந்த மூன்று தினங்களில் Ticket To Finale கான ஏழு டாஸ்குகள் நிறைவடைந்து உள்ளது.
இந்த ஆறு டாஸ்கின் முடிவின் படி ரியோ மற்றும் சோம் சேகர் தலா 32 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக 30 புள்ளிகளுடன் பாலாஜி இரண்டாம் இடத்திலும் 28 புள்ளிகளுடன் ரம்யா மற்றும் ஷிவானி மூன்றாம் இடத்திலும், 24 புள்ளிகளுடன் ஆரி நான்காம் இடத்திலும், 22 புள்ளிகளுடன் கேப்ரில்லா கடைசி இடத்திலும் இருக்கின்றனர். Ticket To Finale டாஸ்க் என்றால் பெரும்பாலும் பிஸிக்கல் டாஸ்க்காக தான் இருக்கும். ஆனால், இந்த சீசனில் பெரும்பாலும் விவாதம் அடிப்படையில் தான் டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது.
https://twitter.com/AariArjunanArmy/status/1347526749278466055
இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஒளிபரப்பான டாஸ்க்கில் ஷிவானி மற்றும் ரம்யா இறுதி வரை போராடி இருந்தனர் என்பதை காண முடிந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் Unseen ப்ரோமோவில் டாஸ்க்கின் போது ஆரி மற்றும் பாலாஜி இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட பாலா பாதியிலேயே டாஸ்க்கில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை தொடர்ந்து ஆரியும் வெளியேறியது போல தெரிகிறது.