Ticket To Finaleவில் லீடிங்கில் இருக்கும் ரம்யா - இன்றைய டாஸ்க்கில் வென்றது யார் ?

By Rajkumar · 6/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=QLcTcFqvKXU&feature=youtu.be

தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. கடந்த திங்கள் கிழமை நிகழ்ச்சியில் Ticket To Finale கான இரண்டு டாஸ்குகள் மட்டும் நிறைவடைந்தது.

இதையும் பாருங்க : Foriegn கணவர், 10 வயது வித்யாசம். பரியேறும் பெருமாள் தேவதை டீச்சர் பற்றி தெரியுமா ?

இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் மூன்றாம் டாஸ்க் முடிவில் பாலாஜி முதலிடத்தையும் ரியோ கடைசி இடத்தையும் பிடித்து இருக்கிறார்கள். அதே போல நேற்று நடைபெற்ற நான்காம் டாஸ்க்கில் ஷிவானி முதல் இடத்தையும் பாலாஜி இறுதி இடத்தையும் பிடித்தனர். இறுதியாக நான்கு டாஸ்கின் இறுதியில் 20 புள்ளிகளுடன் ரம்யா பாண்டியன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அதே போல கேப்ரில்லா வெறும் 7 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று 5ஆம் டாஸ்க் துவங்கப்பட இருக்கிறது. இன்னும் Ticket To Finale Taaskil ஒரு சில டாஸ்க் மட்டுமே இருக்கின்ற நிலையில் இந்த வாரம் பணப்பெட்டி சலுகை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை யார் பெற்றுக்கொண்டு வெளியேறுவார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full