முடிந்தது Ticket To Finale, முதல் இடத்தை பிடித்து பைனலுக்கு சென்ற போட்டியாளர் யார் தெரியுமா?

By Siva · 29/12/2023

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

பிக் பாஸ் 7:

அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் Ticket To Finaleவின் முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் மணி, விஷ்ணு, பூர்ணிமா ஆகிய மூவருக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் இறுதியாக விஷ்ணு வென்று மூன்று புள்ளிகளை பெற்றார். இதனால் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் விஷ்ணு மீது கடும் காண்டில் இருந்தனர்.

Ticket To Finale டாஸ்க்:

இரண்டாம் டாஸ்கில் நிக்சன் முதல் இடத்தையும், பூர்ணிமா இரண்டாம் இடத்தையும் பிடித்து இருந்தார்கள். ஆனால், அதில் நிக்சன் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. பின் நேற்று மூன்றாவது Ticket To Finale டாஸ்க் துவங்கி இருக்கிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் கருத்துகளை கூறி வெல்வது போல வடிவைமைக்கப்ட்டு இருக்கிறது.

போட்டியில் வென்றவர்:

இந்த டாஸ்கில் வெல்பவர்களுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி விஷ்ணு 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பூர்ணமா மற்றும் நிக்சன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். எனவே இந்த Ticket To Finale போட்டியில் விஷ்ணு தான் வென்று இருக்கிறார். பொதுவாக Ticket To Finale டாஸ்க் என்றால் தனித்து ஒருவரின் திறமை மற்றும் யுத்தியை வைத்து வெல்லும் வகையில் தான் இருக்கும் ஆனால், இந்த சீசனில் டீம் போட்டு ஆடுவது போல தான் குடுக்கப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full