நான் வெளியே போனதுக்கு காரணம் அரோரா? உண்மையை போட்டுடைத்த பிக் பாஸ் துஷார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 41 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்தது.
பிக் பாஸ் 9:
மேலும், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து முதலில் துஷார் வெளியே போனார். இதை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக பிரவீன் வெளியேற்றப்பட்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் துஷார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவர் நன்றாகத்தான் விளையாடி வந்தார். பின் இவர் அரோராவுடன் சேர்ந்து கொண்டு செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை. விஜய் சேதுபதியே இவர்கள் பண்ணும் அட்ராசிட்டிக்கு வார்னிங் கொடுத்திருந்தார்.
துஷார் பேட்டி:
பின் எதிர்பாராத வகையில் கடந்த வாரம் துஷார் வெளியேறி இருந்தார். இவருடைய வெளியேற்றத்திற்கு காரணம் அரோரா தான் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அளித்த பேட்டியில் துஷார், நான் வெளியேறியதற்கு அரோரா தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. நிறைய பேர் நிறைய விதமாக பேசுகிறார்கள். நாங்கள் இருவருமே ரொம்ப நல்ல நண்பர்கள். அப்படிதான் பழகினோம். பிக் பாஸ் வீட்டில் மனசு விட்டு பேச எனக்கு கிடைத்த ஒரு நல்ல தோழிதான் அரோரா. அதைத் தாண்டி எங்களுக்கிடையில் எதுவுமில்லை. அவரால் நான் வெளியேறவும் இல்லை.
https://www.youtube.com/watch?v=fqlvV-JZF6Q
எலிமினேஷனுக்கு காரணம்:
வெளியில் நம்மை வேற மாதிரி பார்ப்பாங்க என்று நாங்க ரெண்டு பேருமே கொஞ்ச நாளில் தனித்தனியாக விளையாட ஆரம்பித்து விட்டோம். விஜய் சேதுபதி சார் கூட நிறைய ஹிண்ட் கொடுத்தார். ஒருவருடன் பழகி விட்டால் அந்த உறவை முறித்துக் கொள்வது ரொம்ப கஷ்டம். நான் வெளியே வந்ததும் எங்கள் வீட்டில் அரோரா பற்றி பேசவே இல்லை. நீ ஏன் உன்னுடைய திறமையை காட்டவில்லை? என்றுதான் கேட்டார்கள். எனக்கு நன்றாக நடனமாட தெரியும். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் போனதுமே அது ஞாபகமே வரவில்லை. என்னோட திறமையை காட்டாமல் விட்டதுதான் நான் வெளியேறியதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.