பிக் பாஸ் சீசன் 4ல் இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜி மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு போட்டியாளராகவே இருந்து வந்தார். சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார்.

இதனால் கொஞ்சம் மன வருத்தம் அடைந்த சனம் செட்டி அந்த இடத்திலிருந்து வந்துவிட்டால் அதன் பின்னர் பாலாஜி முருகதாஸை தனியாக அழைத்து சனம் செட்டி பேசுகையில் நீங்கள் டுபாக்கூர் நிகழ்ச்சி என்று சொன்னது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சனம் செட்டி கூறி இதற்கு நீங்கள் அந்த இடத்தில் இருந்தது எனக்கு தெரியாது என்று கூறினார் பாலாஜி.மேலும் இதை நான் உங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் கூறினார் அதன் பின்னரும் இது ஒரு டுபாக்கூர் தான் என்பதை நான் வெளியில் வந்து நிரூபிக்கிறேன் என்று சவால் விட்டார் பாலாஜி.

Advertisement

சனம் எழுதிய கடிதம் :

இந்த விவகாரத்துக்கு பின்னர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கியது விஜய் டிவி.சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும்.

பாலாஜியின் அட்ஜெஸ்ட்மென்ட் சர்ச்சை :

யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டு இருந்தார். ப்ரோமோவை நீக்கியது மட்டுமல்லாமல் அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கூட சனம் எழுதிய புகார் காட்டப்படவில்லை. ஆனால், 2020 அக்டோபர் 11 ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இதுகுறித்து சனம் மற்றும் பாலாஜி வாக்கு வாதம் செய்துகொண்டு இருக்கும் போது, நான் சனம் ஷெட்டியை கூறவில்லை. அவரும் அந்த pageant – ல் இருந்தார் என்று எனக்கு தெரியாது.

Advertisement

சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டு :

அப்படி தெரிந்திந்தால் கூறி இருக்க மாட்டேன். நான் அதை நடத்தும் நிறுவனம் தான் கூறினேன். ஆனால், நீங்கள் சொன்னது ஒட்டு மொத்த பெண்களை தவறாக பேசியது போல இருக்கிறது என்று பாலாஜி கூறியிருந்தார். அப்போது சனம் ஷெட்டி நீங்கள் சொன்னீங்க ”I will prove there is sleeping around” னு கூறி இருந்தார். இப்படி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த விவகாரம் குறித்து பேசி அபிராமி பாலாஜியிடம் கேட்டு இருக்கிறார்.

Advertisement

பாலாஜி கொடுத்த விளக்கம் :

இதற்கு பதில் அளித்த பாலாஜி, நிறைய பேர் pageant என்ற பெயரில் காசு வாங்கிட்டு ஏமாத்தறாங்க, அதை தான் நான் சொன்னேன். அப்போது அவர் என்னிடம் 2 மணி நேரம் என்ன விஷயம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார். நான் தான் பாவப்பட்டு ஒரு காரணம் சொன்னேன். நான் பெண்களுக்காக தான் பேசினேன். ஆனால், அட்ஜெஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக மாற்றி காண்பித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் பாலாஜி.

Advertisement