பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருவருக்கும் ரகசிய உறவா ? எழுந்த புதிய சர்ச்சை - உண்மை என்ன ?
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டில் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்து கொன்டு தான் தான் வருகிறது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதல் கதை நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த சீசனில் சற்று வித்யாசமாக காதலில் பிரிந்த இரண்டு பேர் கலந்துகொண்டு இருக்கின்றனர். அது தான் அபிராமி – நிரூப். இந்த சீசனில் தான் இவர்கள் இருவரும் காதலித்து பிரிந்த கதையை சொன்னார்கள். இதில் நிரூப் ஏற்கனவே யாஷிகாவை காதலித்ததும் அது பிரேக் அப் ஆனது குறித்தும் கடந்த சீசனில் சொல்லி இருந்தார். அதே போல அபிராமியும் முகெனை காதலித்தது தெரியும். மேலும், கடந்த சீசனில் நிரூப் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரும் யாஷிகாவும் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது போலவே நிரூப் – அபிராமி புகைப்படங்களும் வைரலானது.
https://twitter.com/chettyrajubhai/status/1499364381171216388
இப்படி ஒரு நிலையில் தான் இவர்கள் இருவரும் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டதாக கூறி இருந்தனர். பிரிந்த காதலர்கள் பிக் பாஸ் வீட்டில் ஒன்றாக இருப்பதால் இருவரும் மீண்டும் காதலில் விழுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அபிராமிக்கும் – பாலாஜிகும் இடையில் கெமிஸ்ட்ரி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே பாலாஜி – அபிராமிகும் இடையே ஏதோ சென்று கொண்டு இருக்கிறது என்று போட்டியாளர்கள் முனு முனுக்க துவங்கி இருக்கும் நிலையில் பாலாஜியும் அபிராமி பின்னால் தான் சுற்றிக் கொண்டு வருகிறார்.
பாலா மீது கோபத்தில் நிரூப்:
என்னதான் இனி நாங்கள் சேரப்போவது இல்லை என்று நிரூப் கூறிக்கொண்டு வந்தாலும் பாலாஜி, அபிராமி மீது காட்டும் பரிவை நிரூப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடு பாலாஜி, அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் சொல்லி புலம்பி இருந்தார் நிரூப். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய நிரூப், என் முன்னாடியே அபிராமி இடுப்பை கிள்றான். அவளும் எதுவும் சொல்லவில்லை. என்ன நடந்ததுன்னு அவனுக்கு நல்லா தெரியும். நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு.
https://twitter.com/Bbtamil007/status/1499197073891209218
அபிராமி - பாலா- நிரூப் இடையே பிரச்சனை:
ஆனால், என் முன்னாடி வேனா என்று நிரூப் புலம்பி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. பின் ஸ்மோக்கிங் ரூமில் என்ன நடந்தது என்று தாமரையிடம் பாலாஜி கூறி இருக்கிறார். அதில், நான் அவள் இடுப்பை கிள்ளிவிட்டதாக சொல்லி இருக்கான். அவள் கேக்க சொல்ல எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். மேலும், நான் அப்படி பண்ணேன்னு என்ன ஆதாரம் இருக்கு. நான் பிக் பாஸ் கிட்டயே சொல்லிட்டேன். அப்படி எதாவது இருந்துச்சின்னா மக்கள்க்கு போட்டு காமிச்சிடுங்க என்று சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அபிராமி- பாலாஜி குறித்து ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது.
https://twitter.com/kalaishreya/status/1495013081621037057
அபிராமி - பாலா காதல் குறித்த சர்ச்சை:
அபிராமி - பாலா இருவருக்குமிடையே ரகசியமான காதல் போய்க் கொண்டிருக்கின்றது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் பாத்ரூமில் பாலாவும் அபிராமியும் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அபிராமி வேறு வழி வழியாக வந்திருக்கிறார். உடனே பாலாவும் வந்திருக்கிறார். ஆனால், வேறு ஒரு நபர், நான் பாத்ரூமில் போனேன். இதை பார்த்துட்டு எனக்கு செம கோவம் ஆகிவிட்டது. அதனால் வெளியே வந்துவிட்டேன் என்று சொல்கிறார்கள். அப்படி பாத்ரூமில் அவர் என்ன பார்த்தார்? கோபப்படும் அளவுக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை.
அபிராமி - பாலா இடையே நடந்தது:
ஆனால், இவர்கள் அபிராமி பாலா குறித்து தான் பேசுகிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தாமரை கூட என்னடா தம்பி என்று பாலாவிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்கிறார். மேலும், ரகசியமாக பாலா - அபிராமி காதலிக்கிறார்களா? இவர்களுக்குள் என்ன நடக்கிறது? என்று தெரியவில்லை. பல முறை அபிராமி காதல் வலையில் விழுந்து இருக்கிறார். இது குறித்து வனிதாவும் அறிவுரை செய்திருந்தார். ஆனால், இப்போது கேட்பதற்கு வனிதாவும் இல்லை என்பதால் அபிராமி - பாலா உறவு குறித்து பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்து கொண்டிருக்கின்றது. இவர்களுக்குள் காதல் உண்மையா? இல்லையா? என்பதை இனிவரும் காலங்களில் தான் பார்க்கணும்.