பிக் பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது.! மாப்பிள்ளை இவர் தான்.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு பின்னர் தனது பெயரை படு டேமேஜ் செய்து கொண்டவர் வைஷ்ணவி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவர் சற்று வித்யாசமாகவே காணப்பட்டார். வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறாராம். அஞ்சான், விமான ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க : ஒரு வாரத்துக்கு 25 லட்சம் கொடுத்தால் வரேன்.! பிக் பாஸ் குழுவை திணறவிட்ட காமெடி நடிகர்.!
சமீப காலமாக இவர், தனது காதலர் அஞ்சான் ரவியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விரலாக பரவி வந்தது. மேலும், இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீண்ட வருட காதலரான அஞ்சானை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைஷ்ணவி.
https://www.instagram.com/p/ByuLo0LA52F/?igshid=13p8w7dnns9gk
ஆனால், இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது இவர்கள் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது போல தோன்றுகிறது. இருப்பினும் காதலைத்தவரையே வைஷ்ணவி திருமணம் செய்துகொண்டதால் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வைஷ்ணவி 'திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்தால் தான் அது வாழ்க்கையை, ஒன்றாகவும் ஒத்துபோய் வாழ்வதும் நல்ல காதலுக்கு அழகு' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.