ஸ்பைடர் உமனாக மாறியா வைஷ்ணவி..!கிண்டல் செய்தவர்களுக்கு கொடுத்த பதிலை பாருங்கள்.!

By Rajkumar · 20/11/2018
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும், சர்ச்சைகளும் அதிகம் காணப்பட்டது.அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளரான வைஷ்ணவி சக போட்டியாளர்களிடம் சற்று வெறுப்பை சம்பாதித்து ரசிகர்களிடமும் கொஞ்சம் கேட்ட பெயரை எடுத்தார். பிக் பாஸ் வீட்டில் புறம் பேசும் வைஷ்ணவியை மட்டுமே மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, ஆனால், இவர் பிரபல எப் எம் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவருக்கு இரண்டு சகோதரரும் உள்ளனர். சமீபத்தில் வைஷ்ணவி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் வைஷ்ணவி வித்யாசமான ஆடை என்ற பெயரில் பார்ப்பதற்கு ஸ்பைடர் மேன் உடையில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த பல இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் உங்களை நான் அன்பாலோ செய்கிறேன் என்று நக்கலடித்துள்ளார். அதற்கு வைஷ்ணவி கூலாக பண்ணிக்கோ என்று ரிப்ளைசெய்துள்ளார். அதே போல இந்த புகைடபடத்தை பலரும் கிண்டல் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full