'அவளுக்கு அந்த Syndrome இருக்கு' அர்ச்சனாவின் புகைபிடிக்கும் பழக்கத்தை படு மோசமாக விமர்சித்த அர்ச்சனா

By Rajkumar · 7/12/2023

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

பின் Wild Card எண்ட்ரியாக விஜய் வர்மா, அனன்யா உள்ளே வந்து இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில்
Wild Card போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவர் பெரும் பிரபலமானது என்னவோ ராஜா ராணி தொடர் மூலம் தான். இந்த சீரியலில் வில்லியாக மிரட்டிய இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்கள் அழு மூஞ்சாக தான் இருந்தார். அதிலும், இவர் உள்ளே சென்ற ஒரு சில நாளிலேயே இவரை மாயா & கோ டார்கட் செய்து Bully செய்து வந்தனர்.

ஆரம்பத்தில் அவர்களின் கேலிகளுக்கு அழுத அர்ச்சனா, பின்னர் அவர்களுக்கு பதிலடி கொடுத்து ஓட வைத்தார். இதனால் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியது . மேலும், வார இறுதியில் இவருக்கு வரும் கைத்தட்டல்களை பார்த்து தான் செல்லும் பாதை சரி என்று புரிந்துகொண்டு விளையாடி வருகிறார் அர்ச்சனா. ஆனால், இவருக்கு ஆதரவு இருந்து வரும் அதே வேளையில் சில விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதில் மிக முக்கியமாக இவரது புகைபிடிக்கும் பழக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=NVeB68xQk1I&t=1142s

பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இதில் ஆண்கள் அடிக்கடி செல்வதை விட பெண்கள் தான் அடிக்கடி சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அர்ச்சனா தான் அடிக்கடி இந்த அறைக்குள் சென்று வருகிறார். இவர் செல்வது ,மட்டுமல்லாமல் மற்றவர்களையும் துணைக்கு அழைத்து செல்கிறார். ஏற்கனவே ஒரு டாஸ்கின் போது விஷ்ணு, பூர்ணிமா, அர்ச்சனா ஆகிய மூவரும் ஒரே கயிற்றில் கட்டிப்போட பட்டனர். அப்போது அர்ச்சனா புகைபிடிக்கும் அறைக்கு சென்று புகைபிடித்துள்ளார்.

இது குறித்து விஷ்ணு ‘அர்ச்சனா புகைப்பிடிப்பதால் தன்னுடைய ஆரோக்யம் பாதிக்கப்படுகிறது என்று கமல் சாரிடம் செல்லப்போவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளம்பி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ட்ரிங்க்ஸ், ஸ்மோக்கிங் பழக்கம் அர்ச்சனாவிற்கு இருக்கிறது. ட்ரிங்க்ஸ் என்பது டீ, காபி குடிக்கும் பழக்கம். காபி கிடைக்கவில்லை என்று நான் பயங்கரமாக பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு இருந்தேன். அதை பெருசாக பேசினால் இதுவும் பேச தான் வேண்டும்.

இதெல்லாம் ஒரு விதமான போதைப் பொருள்தான். அர்ச்சனா கோபப்பட்டு கத்துவதற்கும்,இப்படி நடந்து கொள்வதற்கும் இதுதான் காரணம் என்று கூறி இருக்கிறார். இதற்கு பலருமே வனிதாவை கிண்டல் செய்து வருகிறார்கள். காரணம், ஏற்கனவே வனிதா புகை பிடிப்பது, மது பாட்டில்களை கையில் வைப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி மற்றவர்களை குறை சொல்ல முடியும்.

விமர்சிக்கும் ரசிகர்கள் :

ஒருவருடைய தனிப்பட்ட விஷயத்தில் கருத்து கூற உங்களுக்கு உரிமையும் கிடையாது என்றெல்லாம் கூறுகிறார்கள். அதோடு வனிதாவின் மகள் ஜோவிகா நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது நல்ல விதமாக தான் பிக் பாஸை விமர்சனம் செய்திருந்தார். கடந்த வாரம் ஜோவிகா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிலிருந்து வனிதா, ஜோவிகா போனது சரியில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தும் முறை சரி இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி தப்பாக இருக்கிறது என்றெல்லாம் விமர்சித்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full