'வெளியே இருந்து அவன் பண்றத பாக்கும் போது' - அசல் கோளாரு குறித்து புட்டு புட்டு வைத்த வனிதா. கரக்டா சொல்லி இருக்காருங்க.

By Ajju · 29/10/2022

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசல் நடந்துகொள்ளும் விதம் குறித்து வனிதா விமர்சித்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாம் வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கொலார்.

வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார். அதன் பின் இவர் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்திலும் அசல் பாடலை எழுதி இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

https://twitter.com/VCDtweets/status/1585483137827618820

இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பு இழுத்து இருந்தார். ஆனால், குயின்சி, நிவாஷினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருக்கிறது. குயின்சி உடைய கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?time_continue=51&v=4AXYbSpEoCU&feature=emb_title

பின் குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு அசல் கடலை போட்டு இருந்தார். அதே போல மைனாவின் கையை பிடித்து தடவியது, மகேஸ்வரியின் காலை தடவுவது போன்ற வேலையை தொடர்ந்து செய்து இருக்கிறார் அசல். ஆனால், நிவாஷினியிடம் தான் ரொம்ப ஓவராக உரசி வருகிறார் அசல்.

ஆனால், தாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்பது போல தான் வெளியில் சொல்லி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் நிவாஷினியிடம் அசல் நடந்துகொள்ளும் விதம் குறித்து பேசி இருக்கும் வனிதா 'வெளியில் இருந்து அவன் செய்வதை பார்க்கும் போது மிகவும் அருவருப்பாக இருக்கிறது. அவன் லவ் பண்ணுகிறேன் என்றால் அதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அவன் நடந்துகொள்ளும் விதம் அவனுடைய Body Language எல்லாத்தையும் பார்க்கும்போது அவன் மனதிற்குள் ஏதோ இருக்கிறது. மேலும், நிவாஷினி அசல் மீது விருப்பத்துடன் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியல' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full