'இப்படி ஒரு உருட்ட நாங்க கேட்டதே இல்ல' - தனது மகள் அடிக்கடி விழுவதற்கு வனிதா சொன்ன காரணத்தை கேட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.

By Arun · 25/11/2023

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

https://twitter.com/MdHakeembava/status/1727399983316713790

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகளும் ஒருவர். வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார்.

இந்த சீசன் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே படிப்பு விஷயத்தில் இவருக்கும் விசித்ராவிற்கும் ஒரு வாக்குவாதமே சென்றது. அப்போது ஜோவிகா, எனக்கு படிப்பு வராது ஆனால், எனக்கு கார் டயரை கழட்டி ஜாக்கி மாட்ட தெரியும் என்று சம்மந்தம் இல்லாமல் பேசினார். மேலும், இதுவரை பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை இதுவரை ஜோவிகா படித்தது கூட கிடையாது. ஆனால், மற்றவர்களிடம் மட்டும் வீராப்பு பேசி வருகிறார் ஜோவிகா.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி வந்தார். அதிலும் அர்ச்சனாவை வயது வித்யாசம் பார்க்காமல் வாடி போடி என்று சொன்னதோடு அவரது மன உலைச்சலை கேலி செய்யும் வகையில் மெடிக்கல் ரூம் போ என்று மிகவும் தரக்குறைவாக பேசி இருந்தார்.

அதே போல டாஸ்க்கில் கூட இவர் சரியாக பங்கேற்பது கிடையாது. இதுவரை இவருக்கு ஆறு முறை கேப்டன் ஆகும் டாஸ்க்கில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த இரண்டு டாஸ்க்கிலும் இவர் தோற்றார். நேற்றய நிகழ்ச்சியில் கூட கேப்டன்சி டாஸ்கில் தோற்றுவிட்டு ஒப்பாரி வைத்தார் ஜோவிகா. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி வழுக்கி விழுந்து வருவதை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் யூடுயூபில் பிக் பாஸ் review என்ற பெயரில் தனது மகளுக்காக மட்டும் முட்டு கொடுத்துவரும் வனிதா இதுகுறித்து பேசிய போது ஜோவிகாவுக்கு அறிவே இல்லை என்றும், வீட்டில் இருந்து காருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, ஆலம்பாக்கத்தில் உள்ள என்னுடைய அப்பா வீட்டில் இருக்கும் போதும் சரி, எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பா. அவளுக்கு ஓடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவள் ஒரு ரன்னர், இதனால் பலமுறை ஓடாதே கீழே விழுந்து விடுவாய் என சொல்லி பார்த்துவிட்டேன் அதை மட்டும் அவ செய்யவே மாட்டா. விழுந்து நல்ல அடிபடட்டும் அப்போதான் அவளுக்கு புத்தி வரும்' என்று முட்டு கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full