சட்டப்படி பார்த்தால் எனக்கு 2 திருமணம் தான் ஆகி இருக்கு. 3ஆம் திருமணம் செய்தால் மாப்பிள்ளை இப்படி தான் இருக்க வேண்டும் - ஓப்பனாக சொன்ன வனிதா.

By Arun · 29/1/2024

மூன்றாம் திருமணம் குறித்து வனிதா அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார்.

திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

வனிதா நடிக்கும் படங்கள்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் வனிதா பிசியாக நடித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?si=5QYs0dOEv2y2Ymtv&v=izCNIkTkJQg&feature=youtu.be

வனிதாவின் யூடியூப் சேனல் :

மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் திருமணம் குறித்து பேசி இருக்கிறார் வனிதா.

3 ஆம் திருமணம் குறித்து :

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வனிதாவிடம் தொகுப்பாளர் வில்லங்கமாக திருமணம் பற்றி பல கேள்விகள் கேட்டார். அதற்கு கோபப்படாமல் பதில் சொன்ன வனிதா தான் இதுவரை சட்டப்படி இரண்டு முறை தான் திருமணம் செய்து இருப்பதாகவும், மூன்றாவது முறையும் செய்வேன் என கூறி இருக்கிறார். 3ம் திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு என கூறிய அவரிடம் மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா இல்லை செகப்பா இருக்கணுமா என தொகுப்பாளர் கேட்டார்.

மாப்பிள்ளை இப்படி தான் இருக்கனும் :

அதற்கு பதில் அளித்த வனிதா 'பச்சையாக இருக்கனும். குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டும். அப்படி ஒருவரை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்' என காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார். மேலும், எப்போது பேட்டி கொடுத்தாலும் திருமணம் பற்றிய கேள்விகளை தான் கேட்கிறார்கள் எனவும் அவர் கோபமாக பேசி இருக்கிறார். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full