லியோ படத்தில் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தப்பட்ட மகனின் புகைப்படம் - வனிதா கூறிய பதில்.
லியோ படத்தில் வந்த தனது மகனின் புகைப்படம் குறித்து வனிதா பேசி இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
https://twitter.com/vanithavijayku1/status/1715971093272641610
இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. லியோ படத்தில் எண்ணற்ற நடிகர்கள் நடித்து இருந்தாலும் படம் பார்த்த போது தான் அட இவரும் படத்தில் நடித்துள்ளாரா என்ற வியப்பு ஏற்பட்டது. அந்த வகையில் வனிதாவின் மகன் கூட இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார் அந்த புகைப்படம் ஒன்றில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை காண்பிப்பார் அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவன் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீ ஹரிதான்.
இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் வனிதா ' எனக்கு அது உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் தரும் விஷயமாக இருந்தது. நான் இதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கும், விஜய்க்கும் என்னுடைய சமூக வலைதளத்தில் நன்றியை கூட தெரிவித்திருந்தேன்.இது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். பொதுவாக திரைப்படங்களில் இறந்து போனவர்களை தான் போட்டோக்களாக வைப்பார்கள்.
அதற்காக யாரும், யாரிடமும் சென்று அனுமதி கேட்க வேண்டிய தேவை இல்லை. காரணம், அவர்களே இந்த உலகத்தில் தற்போது இல்லை. ஆனால் அதனை நாம் படத்தில் பார்க்கும் பொழுது அதில் நமக்கு ஒரு விதமான ரிச் ஃபீல் கிடைக்கும். லியோ திரைப்படத்தில் விஜய் காண்பித்த போட்டோ ஸ்ரீஹரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோ தான். அதை படத்தில் வைத்தது ஏனலு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது' என்று கூறியுள்ளார்.
தற்போது ஸ்ரீஹரி தனது தந்தை ஆகாசுடன் தான் வாழ்ந்து வருகிறார். ஸ்ரீஹரியும் சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பது தான் ஆசை. ஸ்ரீஹரி ஒரு சில குறும்படங்களில் கூட நடித்து இருக்கிறார். மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக கூட நடித்து இருக்கிறார். கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் சிறு வயது கார்த்தியாக ஸ்ரீஹரி நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.