Nepotism பஞ்சாயத்தில் சிக்கிய ஜோவிகா - நேற்று கமல், சுருதி ஹாசனுக்காக செய்த விஷயத்தை உதாரணம் காட்டிய வனிதா.

By Rajkumar · 27/10/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து நான்காவது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

https://twitter.com/biggboss7tamil_/status/1717564172547080648

நேற்றய நிகழ்ச்சியில் Ranking Task நடைபெற்றது..இதில் பிக் பாஸில் தங்கள் தகுதியை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு விவாதிக்க வேண்டும் என்பதே டாஸ்க். இந்த டாஸ்கின் போது முதல் இடத்திற்காக பிரதீப் மற்றும் ஜோவிகாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரதீப், நீ மிடில் கிளாஸ் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறாய்.

எந்த ஒரு மிடில் கிளாசும் இவ்ளோ ஷூ, இவ்வளவு ஆடை வைத்து நான் பார்த்தது இல்லை என்று பேசினார். இதற்கு பதில் அளித்த ஜோவிகா, பிக் பாஸில் நான் ஆடும் கேமிற்கும் நான் போடும் ஷுவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்கு வாதம் நீள, பிரதீப் ஜோவிகாவை நாயே என்று சொல்லிவிட்டார். இதனால் நான் வார்த்தையை விட்டுவிட்டேன் அதனால் நான் கடைசி இடத்திற்கு சென்றுவிடுகிறேன் என்று கூறினார்.

நேற்றய நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்காக ஆதரவு கொடுத்துள்ள வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ' ‘ஜோவிகாவின் அம்மா தனது மகளை வளர்ப்பதற்காகக் கஷ்டப்படுகிறார். ஆனால், இந்த வயதில் பணம் சம்பாதிக்க துப்பில்லாமல் அதற்காக இந்த சமூகத்தை குறை சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் பிரதீப்?

தனது தோல்வியை சொல்லி சொல்லியே இந்த நிகழ்ச்சியில் வெற்றிப் பெறலாம் என பிரதீப் நினைக்கிறார். இது முற்றிலும் தவறான விவாதம் பிரதீப். ஏழையால் சட்டை, செருப்பு வாங்க முடியாது, அதனால் நடிகனாக வேண்டும். அதனால் படம் தயாரிக்க பணம் தேவை. ஒரு நடிகருக்கு திறமை தேவை, வாய்ப்புகளை பெற இயக்குனர்களை சந்திக்க வேண்டும்’  என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/vanithavijayku1/status/1717644657373622607

வனிதாவின் பதிவிற்கு சிலர், ஜோவிகா ஒரு Nepotism புரொடக்ட் தான். உங்களால் தான் அவருக்கு இந்த பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்று கூறி வந்தனர். இதற்கு பதில் அளித்த வனிதா, நேற்று ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பாடல் வீடியோவிற்கு கமல் வாழ்த்துக்களை சொல்லி பதிவிட்டு இருந்ததை குறிப்பிட்டு ' பிள்ளைகளின் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் ஆதரவு கொடுப்பது ஒரு ஆரோக்யமான விஷயம். அது ஒன்றும் குற்றமில்லை.

நாம் தான் அவர்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தோம் நாம் தான் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார். ஒரு சில இதில் பெற்றோர்களை அசிங்கப்படுத்தி அதற்கு ஒரு மோசமாக பெயரை கூறுவது மனிததன்மை அற்ற செயல் என்று பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்த பதிவை பார்த்த பலர் தயவு செய்து உங்களை எல்லாம் கமலுடன் ஒப்பிட வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full