சினிமாவில் பெண்கள் தண்ணியடிப்பதையும் தம் அடிப்பதையும் முன்னேற்றமாக தான் நான் பார்க்கிறேன் - வனிதா கொடுத்த பதிலடி.

By Rajkumar · 13/8/2023

புகைபிடித்தல் காட்சி குறித்து வனிதா அளித்திற்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னெல்லாம் சினிமா உலகில் நடிகர்கள் தான் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பார்கள். அதுவே பெரிய சர்ச்சையாக எழுந்து உள்ளது. புகைப்பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. ஏன் என்றால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் செய்யும் மாதிரியே செய்வார்கள். அதனால் தான் இதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

தற்போது சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் நடிகைகளும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கின்றனர். இது மிகப் பெரிய காட்சிகளில் அதிகம் வைக்கிறார்கள். அதிலும் படம் வெளியாகும் முன் டீசரில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வந்தால் போதும் சோசியல் மீடியாவில் அந்த படங்களை குறித்து தாறுமாறாக விமர்சனத்தை எழுதி விடுகிறார்கள். மேலும், படத்தில் நடிகைகள் புகைபிடிக்கும் காட்சிகள் வெளிவந்தால் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகள்:

இவர்கள் உண்மையாலுமே இந்த பழக்கத்தில் உள்ளார் என்று தெரியவந்தால் மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான். உண்மையாலுமே நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் புகைபிடிக்கும் பழக்கம் உண்டு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான பல நடிகைகள் இந்த மாதிரி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்து இருக்கிறார்கள். அதில் சில நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் புகைப்பிடித்தல், மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

வனிதா அளித்த பேட்டி:

அந்த வகையில் வனிதாவும் புகை பிடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் வனிதா அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ரவுண்ட் கட்டி சரா மாறியாக வனிதாவிடம் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் காட்சி குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு வனிதா, ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குடிப்பழக்கத்தை பற்றி பேசி இருந்தது அனைவரும் அறிந்ததே.

நடிகைகள் புகைபிடிக்கும் காட்சி:

எல்லோருமே குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என்று சொல்வார்கள். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. ஒருவர் கதை எழுதுகிறார் என்றால் அவர் கொலை செய்து, ரேப் பண்ணி கதையை எழுத வேண்டிய அவசியம் இல்லை. கற்பனைக்காக அவர் செய்கிறார். அதனால் சினிமாவையும் நிஜ வாழ்க்கையும் ஒன்றாக இணைக்காதீர்கள். நடிகர்கள் படங்களில் புகை பிடிப்பதை வரவேற்கிறீர்கள். ஆனால், அதே நடிகைகள் செய்தால் சர்ச்சையாக்குகிறீர்கள்.

புகைபிடிக்கும் காட்சி குறித்து சொன்னது:

காலம் மாறுகிறது. இதையும் வரவேற்க வேண்டும். இதனால் அவர்கள் நிஜத்திலும் அதை செய்வார்கள் என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். நான் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்தது பட தேவை இருந்தது. அதனால் நான் நடித்தேன். அதற்காக நான் இப்படி தான் செய்வேன், இப்படித்தான் பண்ணுவேன் என்று என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை மற்றவர்கள் சர்ச்சையாக தேவையில்லை என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full