என் அப்பாவால் தான் என் வாழ்க்கை இப்படி ஆச்சு அவருக்கு வலிக்கனும் அதனால் தான் இன்னும் அதை நீக்காமல் இருக்கிறேன் - வனிதா.

By Arun · 31/8/2023

தன்னுடைய பெயருக்கு பின்னால் விஜயகுமார் என்ற பெயரை சேர்த்ததற்கான காரணம் குறித்து வனிதா விஜயகுமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சையின் நாயகியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்ந்த விஜயகுமார்- மஞ்சுளாவின் மூத்த மகள் ஆவார். சினிமாவில் இருந்து சில காலம் வனிதா விலகி இருந்தார்.

அதோடு குடும்ப பிரச்சனை காரணமாக வனிதாவை வீட்டை விட்டும், குடும்பத்தை விட்டும் விஜயகுமார் விலக்கி வைத்து இருக்கிறார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார். அதற்கு பிறகு இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். வனிதா சினிமா உலகிலும், சோசியல் மீடியாவிலும் பிசியாக இருந்தாலும் இவருடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறார்.

வனிதா குறித்த தகவல்:

இந்த நிலையில் சமீபத்தில் வனிதா விஜயகுமார் அவர்கள் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய தந்தை குறித்து கூறியிருந்தது, நான் இப்போது என்னுடைய மனதளவில் வலிமையான பெண்ணாக இருக்கிறேன் இந்த மாற்றத்திற்கு காரணம் என்னுடைய அப்பா தான். என்னுடைய அப்பா ஒரு பேட்டியில் பேசி இருந்ததை பார்த்தேன். அதில் அவர், என் பிள்ளைகள் எல்லாம் என் பேச்சை கேட்பார்கள் என்று சொல்லி கவிதா, அனிதா, பிரீத்தி, ஸ்ரீதேவி, அருண் விஜய் என்று எல்லோர் பேரையும் சொன்னார்.

https://www.youtube.com/watch?v=zyOiV4teQ4o

வனிதா அளித்த பேட்டி:

அப்போது அவர் என்னுடைய பெயரை சொல்லவே இல்லை. என்னுடைய பெயரை எதிலும் குறிப்பிடவும் இல்லை. இப்படி இவர் பேசியிருந்த வீடியோவை எனக்கு ஒருவர் அனுப்பி வைத்திருந்தார். அந்த வீடியோவை நான் கிட்டத்தட்ட 15 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன். இது எனக்கு கோபத்தை கொடுத்தது. இதை பார்த்து நான் பல தடவை கோபத்தில் அழுது இருக்கேன். ஆனால், அதில் அவர் சொன்ன விஷயத்தை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது பெண் பிள்ளைகளில் நான் மட்டும்தான் அப்பாவுடைய பேச்சை கேட்கவில்லை. அவருக்கு கீழ்ப்படியாமல் நான் இருந்ததெல்லாம் உண்மைதான்.

விஜயகுமார் பெயர் சேர்த்த காரணம்:

தப்பான அட்வைஸ் கொடுத்தா நான் கேட்கணும் என்று அவசியம் இல்லை. அவர் வனிதா மட்டும் தான் என் பேச்சை கேட்கவில்லை என்று சொல்லியிருந்தால் நானே கைதட்டி இருப்பேன். ஆனால், நான் மட்டும்தான் உண்மையிலேயே அவர் பேச்சைக் கேட்டேன். அதனால் தான் என் வாழ்க்கை காலி ஆகிவிட்டது. என் அப்பா கூட இவ்வளவு சண்டை வந்து அவரது பெயரை ஏன் நீங்கள் விடுவதில்லை என்று பல பேர் கேட்டார்கள். அதற்கு காரணம் அந்த விஜயகுமார் என்று போட்டால் தான் அவருக்கு வலிக்கும்.

விஜயகுமார் குறித்து சொன்னது:

அதனால் தான் அவர் பெயரை மாற்ற மாட்டேன். உங்கள் குடும்பத்தில் நான் இல்லை என்று சொல்லலாம். ஆனால், உலகத்தை பொறுத்தவரை நான் உங்கள் பொண்ணு தான். அவரை ரொம்ப மிஸ் பண்ணி இருக்கேன். பல நாள் அவருக்காக அழுதிருந்தேன். ஒருநாள் என் பொண்ணு, இல்லாத ஒருத்தரை பற்றி இன்னும் எவ்வளவு நாள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கப் போறீங்க. இருக்கிற எங்கள பத்தி யோசிங்க என்று சொன்னாள். அன்னைக்கு தான் இதையெல்லாம் தூக்கி போட்டு என்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full