நாஞ்சில் விஜயனுக்கு எனக்கும் என்ன சம்பந்தம் - சூர்யா வெளியிட்ட வீடியோ.

By Rajkumar · 14/7/2020

தன்னை சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்கள் மீது வனிதா போலீசில் புகார் அளித்துள்ளார். ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி குறித்து பேசிய வனிதா, அவள் ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார் வனிதா.மேலும், வனிதாவின் வழக்கறிஞர் பேசுகையில், அவள் ஒரு கஞ்சா வியாபாரி. அவள் வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. அவள் செய்யும் தப்பை மறைக்க தான் தற்போது இது போன்று எல்லாம் பேசி வருகிறாள்.

https://www.youtube.com/watch?v=_skQ2ts3NHE

மேலும், அவளை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், தனது யூடுயூப் சேனலில் சூர்யா தேவியை பேட்டி எடுத்து போட்டிருந்தார். அப்போது நாஞ்சில் விஜயன், வனிதா குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்து வந்த சூர்யா தேவி ஒரு கட்டத்தில் 'நீ என்ன அவளுக்கு சப்போர்ட் செய்கிறாய்' என்று கேட்டார். அதேபோல நாஞ்சில் விஜயன், வனிதாவை பிரபலம் என்று கூறியவுடன் 'டேய் யாருடாபிரபலம் அவ ஒன்னும் பிரபலம் கிடையாது டா. ஏதாவது சொல்லி விடப் போறேன்' என்று நாஞ்சில் விஜயனை வறுத்து எடுத்து விட்டார் சூர்யா அக்கா.

https://www.youtube.com/watch?v=4mQCofG4WdU

இப்படி ஒரு நிலையில் தான் வனிதாவின் வழக்கறிஞர், சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ள சூர்யா தேவி, தேவை இல்லாமல் நாஞ்சில் விஜயன் வாழ்க்கையை கெடுக்காதீர்கள். அவன் என்னுடைய பிரென்ட் தான். ஆனால், அவனை பார்த்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. பேட்டி எடுக்கத்தான் அவன் எனக்கு போன் செய்தான் என்றும் கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full