மாலையும் கழுத்துமாக வனிதா மற்றும் பீட்டர் ஜோடி - வைரலாகும் புகைப்படம்.

By Rajkumar · 11/9/2020

சமூக வலைதளத்தில் தற்போது வேண்டுமானால் மீரா மிதுன் ஹாட் டாபிக்காக இருந்து வந்தாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

https://www.instagram.com/p/CE8wepHDuOO/

வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது. இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது.

விரைவில் சட்ட ரீதியாக பீட்டர் விவாகரத்து பெற்ற பின்னர் தங்கள் திருமணம் நடைபெறும் என்று வனிதா அறிவித்து இருந்தார். மேலும், அவ்வப்போது யூடியூபில் இணைந்து வீடியோ பகிர்ந்து வந்தார் வனிதா. இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா, பீட்டர் மற்றும் தனது இரு மகள்களுடன் கழுத்தில் பண மாலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

https://www.instagram.com/p/CE8woUgDd-k/

இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள வனிதா, தனது வீட்டில் லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டில் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் வனிதா குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தான் பீட்டர் பவுலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full