நயன் விக்கியின் இந்த போஸை போல பீட்டர் பவுலுடன் வனிதா கொடுத்த போஸ்.

By Rajkumar · 18/7/2020

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தனக்கு விவாகரத்து கொடுக்காமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பீட்டரின் மனைவி எலிசபெத்.

https://www.instagram.com/p/CCwDXHODfE3/

வனிதாவின் திருமண விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் பெரும்பாலானோர் கேட்கும் ஒரே கேள்வி இப்படி ஒரு பிரச்சனை இருக்கையில் பீட்டர் பவுல் ஏன் இன்னும் பேட்டிகளில் பங்கு பெறாமல் மௌனம் சாதித்து வருகிறார் என்பதுதான்.அதேபோல பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத், பீட்டர் பவுல் என்ன முத்தம் கொடுக்க மட்டும்தான் கேமரா முன் வருவாரா ? இவ்வளவு பிரச்சனை சென்றுகொண்டிருக்கிறது அவர் ஏன் இன்னும் அவர் ஒரு பேட்டிகளில் கூட கலந்து கொள்ளவில்லை.

எதற்கு எடுத்தாலும் வனிதா தான் முன்னால் வந்து நிற்கிறாள். இது எனக்கும் பீட்டர் பவுலுக்கும் இடையிலான பிரச்சனை இடையில் பேச இவள் யார் கணவன்-மனைவி பிரச்சினைகளை பேச இவர் யார் என்றெல்லாம் விளாசி இருந்தார்இப்படி ஒரு நிலையில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் ஒன்றாக இணைந்து பேட்டி கொடுக்க போவதாக வனிதா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதனை உறுதி செய்யும் விதமாக பீட்டர் பவுல் உடன் இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் வனிதா அதில் முதல் கப்பல் பேட்டி என்று குறிப்பிட்டிருக்கிறார் வனிதா பதிவிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் கொடுத்த தோசை போலவே இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள் நீங்களே அந்த இரண்டு புகைப்படத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full