இந்த விஷயம் வனிதா அக்காக்கு தெரியுமா Mr. ரவீந்தர் - ரசிகர் கமென்டிற்கு ரவீந்தர் சொன்ன பதில். இதோ வீடியோ.

By Siva · 4/9/2022

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சன் மியூசிக் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருக்கும் செய்தி ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழில் 'நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

மேலும், வனிதா - பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார். தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக புதிய ஷாக்கை கொடுத்துள்ளார்.

வனிதா குறித்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் :

இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் சமூக வலைதளத்தில் உயர்வுள்ளது திருமணத்தை அதே அளவு விமர்சனம் செய்தும் வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வனிதா திருமண விஷயத்தில் இவர் தலையிட்டு பஞ்சாயத்து செய்ததை குறிப்பிட்டு ஏற்கனவே திருமணம் ஆனவரை வனிதா திருமணம் செய்தால் அது தவறு. ஆனால், நீங்கள் செய்தால் அது நியாயமா என்றெல்லாம் சமூக வலைதளத்தில் வளரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/chettyrajubhai/status/1566330403082113024

எனக்கும் இரண்டாம் திருமணம் தான் :

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்..திருமணத்திற்கு பின்னர் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஒரு சில பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் பேசிய ரவீந்திரன் எங்கள் திருமணத்திற்கு பின்னர் பலரும் மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்துவிட்டார் என்று தான் தலைப்புகளை போட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

வனிதாவிற்கு தெரிந்தால் இதான் செய்வார் :

ஆனால், உண்மையில் எனக்கும் இது இரண்டாம் திருமணம் தான். ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து நான் அவ்வளவாக வெளியில் சொன்னது கிடையாது என்பதால் எனக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாது. அதேபோல வனிதா விஜயகுமார் விஷயத்தில் எனக்கு திருமணமான விஷயம் வனிதாவிற்கு நிச்சயம் தெரிந்து இருக்கும் ஒருவேளை நாங்கள் இருவரும் சுமூகமான உறவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் எனக்கு வாழ்த்துக்களை சொல்லி இருப்பார். அதேபோல மகாலட்சுமி கூட என்னிடம் வனிதா ஏன் இன்னும் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்று கேட்டு இருந்தார்.

வனிதாவுடனான பேட்டி :

வனிதா விஜயகுமார் விஷயத்தில் அவர் எடுத்த முடிவு தவறானது என்று அவர் பின்னர் புரிந்து கொண்டார். அதேபோல அந்த விஷயத்திற்கு பின்னர் வனிதா விஜயகுமாரை நான் பேட்டி எடுத்து இருந்தேன். ஆனால், அந்த பேட்டியை இதுவரை நான் வெளியிடவில்லை. வனிதாவிற்கு எங்கள் திருமண செய்தி தெரிந்திருந்தால் நிச்சயம் அவர் எனக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full