முன்னாள் காதலர் ராபர் மாஸ்டருடன் மீண்டும் இணைந்த வனிதா - எதற்காக தெரியுமா?
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் தான் இப்போது இணையதளத்தில் பரவி வருகிறது. மேலும் இப்படம் 'பாங்காக்கில்' படம் ஆக்கப்படுவதாகவும், அங்குள்ள மாரியம்மன் கோவில் ஒன்றில் சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக தெரிகிறது.நீண்ட நாள் கழித்து ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் இணைந்து நடிப்பதால் இப்படம் மக்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி தமிழ் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மக்கள் வனிதா. இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு போன்ற தெனிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த இவர் 1995ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த 'சந்திரலேகா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
நடன இயக்குனர் ராபர்ட் குறித்து:
நடன இயக்குனர் ராபட்டின் முழு பெயர் 'ராபர்ட் ராஜ்' ஆகும். ராபர்ட் தனது சினிமா வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக 1991 ல் வெளியான 'அழகன்' என்ற படத்தில் மம்முட்டியின் மகனாக தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், அவர் நடனமாடிய பாடல்களில் கேமியோ ரோல்களிலும் நடித்து வந்தார். மேலும் அவர் 2022 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ் சீசன் 6' பங்கேற்றது நாம் அறிந்தவையே.
வனிதாவும் ராபர்ட்டும்:
மேலும், ராபர்ட் மாஸ்டர் வத்திக்குச்சி வனிதாவின் கணவர் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்று. இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்திருந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ராபர்ட் மாஸ்டரை பிரிந்து விட்டார் வனிதா. அதுமட்டுமில்லாமல் ராபர்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய படம் பற்றிய தகவல்:
நடிகை வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் நடிக்கும் புதிய படத்தை பற்றி பட குழுவினர் கூறுகையில், இப்படத்தின் பெயர், "மிஸ்டர் & மிஸஸ்" என்றும் வனிதா- ராபர்ட் காம்பினேஷன் என்பது ஆரம்பத்தில் ரியலா இருந்த ஒன்றுதான் என்று கூறி இருந்தனர். மேலும் வனிதா பெயரை ராபர்ட் டாட்டு குத்தி இருந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சதெல்லாம் கோலிவுட்டில் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் என்றனர்.
அதனைத் தொடர்ந்து பட குழுவினர், ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் போனப்ப அந்த வாய்ப்பை வாங்கித் தந்ததே வனிதா தான் என்று அவரேசொல்லி இருக்கிறார். மேலும் "வனிதா என்றாலே 'வைரல் நியூஸ்' தான் என்கிற நிலைமையில், வனிதா -ராபர்ட் மாஸ்டர் காம்பினேஷன் கண்டிப்பாக ட்ரெண்ட் ஆகும் என்கிற ஐடியாவை வைத்து ஒரு கதை ஓகே ஆக, அவர்கள் இரண்டு பேரும் ஜம்முனு சூட்டிங் கிளம்பிட்டாங்க" என்று புன்னகைத்தனர்.
படத்தில் நடிக்கும் பிரபலங்கள்:
மேலும் ,இந்த படத்தில் வனிதாவின் அப்பாவாக ரவிகாந்தும், அம்மாவாக ஷகீலாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் பிரேம்ஜி மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்று கூறியிருந்தனர். அதனைத் தொடர்ந்து வனிதாவின் மகள் ஜோதிகாவும் தயாரிப்பு பணியில் வேலை செய்கிறார்.படத்தின் தயாரிப்பாளர் வனிதாவின் நண்பர் 'ஜேஷ்' என்றும் தமிழ்நாட்டில் பிறந்து அவர் ஆஸ்திரேலியாவில் கட்டுமான பிசினஸில் இருக்கும் தொழிலதிபர் என்றும் பகிர்ந்திருந்தனர்.