ஜோவிகா அப்படி சொல்லவே இல்ல, ஆதாரத்தை காட்லனா ஜோவிகாவை வைத்தே கமல் மேல கேஸ் போடுவேன் - வனிதா பரபரப்பு.

By Arun · 10/11/2023

சரியான விளக்கம் கமல் கொடுக்கவில்லை என்றால் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்று ஆவேசமாக வனிதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 38 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிரதீப் வெளியேற்றம் குறித்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

https://twitter.com/StoryTimeWithK/status/1722317688188334553

கடந்த சனிக்கிழமை பிரதீப்க்கு Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டு இருந்ததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இதற்கு முழு காரணம் மாயா,பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் அவருடைய கேங் பிற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருகிறார்கள்.

இதனால் சில பேர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஜோவிகா இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே நன்றாகத்தான் விளையாடிக் கொண்டு வந்தார். வனிதா போல் இல்லை ஜோதிகா திறமையாக விளையாடி வருகிறார். தன்னுடைய வயசுக்கும் மீறி பொறுமையாக நடந்து கொள்கிறார் என்றெல்லாம் பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும்போது இவர் புல்லி கேங் என்று சொல்லப்படும் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்யும் வேலைகள் தான் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது.

https://twitter.com/Kpcineview/status/1722555076273934655

குறிப்பாக, இவர் பிரதீப் வெளியேறியதற்கு காரணமாகி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதோடு கடந்த வாரம் எபிசோட்டில் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியதும் ஜோவிகா தான் முதலில் பேசி இருந்தார். ஜோவிகா, பிரதீப் மீது இருந்த கோபத்தில் தான் இப்படியெல்லாம் பேசி இருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் வனிதா பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய பொண்ணு உமன் சேஃப்டி பற்றி பேசவே இல்லை. முதல் வாரத்தில் இருந்தே பிரதீப்புக்கும் என் மகளுக்கும் நல்ல புரிதல் இருந்தது.

அப்போது கூட எல்லா பெண்களும் பிரதிப்பை குறித்து அவர்களுடைய கருத்து வைக்கும் போது கூட ஜோவிக்காவும் தன்னுடைய தரப்பு வாதத்தை முன் வைத்தார். ஆனால், அவள் பிளான் பண்ணி பிரதிப்பை வெளியேற்றியதாக சிலர் கூறி வருகிறார்கள். என் மகள் பிளான் பண்ணி தான் பிரதிப்பை வெளியேற்றினார் என்றும் சிலர் வீடியோ பரப்பி வருகிறார்கள். இது என்னுடைய மகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=c9u0ZFRLIL8

இந்த ரெட் கார்ட் விவகாரம் குறித்து கண்டிப்பாக கமல் இந்த வாரம் பேசி ஆகவேண்டும். இல்லை என்றால் நானே இல்லை என் மகளோ கமல் மீது வழக்கு தொடுப்போம். இந்த விவகாரத்தில் என்னுடைய மகளின் பெயர்தான் அதிகமாக அடிபடுகிறது. அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரியான விளக்கம் கமல் கொடுக்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் என்று ஆவேசமாக வனிதா பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full