தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின் குறித்து மோசமான ட்வீட் செய்த வனிதா.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

By Rajkumar · 30/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் நேற்று வெளியேற்றப்பட்டது தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது சக போட்டியாளர்கள் கூட தர்ஷன் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும், தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு முன்னாள் போட்டியாளர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

https://twitter.com/vanithavijayku1/status/1178374554458021890

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்து வந்த வனிதா, தர்ஷன் வெளியேற்றம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் தர்ஷன் வெளியேற்றத்திற்கு காரணம் ஷெரின் தான் என்று மறைமுகமாக கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனிதா, அவள்(ஷெரின்) திட்டமிட்டு சாதித்து விட்டாள். அவள் நினைத்ததை சாதிப்பதில் மிகவும் உறுதியானவள். அவன்(தர்ஷன்) அவளுடைய வலையில் சுலபமாக விழுந்து விட்டான். அவன் எதிர்பாராத விஷயத்தை தற்போது கண்டுள்ளதால் நிச்சயம் அவன் கனத்த இதயத்துடன் தான் இருப்பான் என்று பதிவிட்டுள்ளார்.

வனிதாவின் இந்த பதிவு ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது அதற்கு முக்கிய காரணமே ஆரம்பத்திலிருந்தே அனிதாவிற்கு தர்ஷன் மீது ஒரு வெறுப்பு இருந்து கொண்டு தான் வந்தது அதேபோல தன்னுடன் நெருக்கமாக பழகிய தாயின் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது ஒரு கட்டத்தில் தர்ஷன் விஷயத்தில் கேவலமாக பேசியதால் செரின் மற்றும் மனிதர்களுக்கு சண்டையும் வெடித்திருந்தது இருப்பினும் வனிதா ஷெரின் மற்றும் தர்ஷன் இடம் நன்றாகவே பழகி வந்தார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவின் வெளியேறிய போது என்னுடைய ஓட்டு லாஸ்லியா அவருக்குத்தான் இது என்னுடைய நேர்மையான தனிப்பட்ட விருப்பம் இந்த தருணத்தில் அந்த பெண் தவறான தேர்வு இல்லை அவரை நான் நெருக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். அவள் ஒரு டார்லிங் எனக்கு மற்றபடி மற்றவர்கள் மேல் எந்த ஒரு தனிப்பட்ட வஞ்சமும் இல்லை மற்றவர்களை ஒப்பிடும்போது அவர்தான் என்னுடைய சிறந்த தேர்வு என்று ட்வீட் செய்தார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full