இத்தனை ரணகளத்திலும் பீட்டர் பவுலின் பிறந்தநாளை இன்று கொண்டாடிய வனிதா.

By Rajkumar · 24/7/2020

கடந்த சில தினங்களாகவே வனிதா தான் சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார் மூன்றாவது திருமண சர்ச்சைகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதா. வனிதா மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால் அவருக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து தான் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும். கடந்த சில நாட்களாக வனிதா அளித்த பேட்டியில் அவர் சொன்ன வார்த்தைகளால்வனிதாவுக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக நயன்தாரா குறித்து பேசி இருந்தது. தஞ்சாவூர் மக்கள் குறித்து சர்ச்சையான விஷயத்தை பேசி இருந்தது என்று வனிதா பல்வேறு சிக்கல்களில் சிக்கினார்.

அதிலும் தஞ்சாவூரில் இருக்கும் மக்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள் என்று வனிதா கூறியது தஞ்சாவூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சியினரும் காங்கிரஸ் கட்சியினரும் வனிதா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார்கள். மேலும், வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். இதனால் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

https://www.instagram.com/p/CDAvJc2jjRT/

இப்படி பல்வேறு பிரச்சினைகள் சென்று கொண்டிருக்க இன்று (ஜூலை 24)பீட்டர் பவுல் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் வனிதா, வீட்டிலேயே குட்டீஸ்களுடன் பீட்டர் பவுலின் பிறந்தநாளைக் கொண்டாடியதாக புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்று வடிவேலு கூறும் வசனம் தான் நம் நினைவிற்கு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full