தைரியம் இருந்தா அந்த வீடியோவ இப்போ போடு ரவி - ஓபன் சேலஜ் வெளியிட்ட வனிதா.

By Rajkumar · 15/9/2022

ரவீந்திரனின் திருமணம் குறித்து போட்ட டீவ்ட்க்கு வனிதா தற்போது விளக்கம் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாஉலகில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்கள் சன் மியூசிக் தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருக்கும் செய்தி ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும்.

அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது. மேலும், வனிதா – பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் அதே அளவு விமர்சனம் செய்தும் வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, வனிதா திருமண விஷயத்தில் இவர் தலையிட்டு பஞ்சாயத்து செய்ததை குறிப்பிட்டு ஏற்கனவே திருமணம் ஆனவரை வனிதா திருமணம் செய்தால் அது தவறு.

ஆனால், நீங்கள் செய்தால் அது நியாயமா? என்றெல்லாம் சமூக வலைதளத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.வனிதாவிற்கு தெரிந்தால் இதான் செய்வார் ஆனால், உண்மையில் எனக்கும் இது இரண்டாம் திருமணம் தான். எனக்கு திருமணமான விஷயம் வனிதாவிற்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.ஒருவேளை நாங்கள் இருவரும் சுமூகமான உறவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் எனக்கு வாழ்த்துக்களை சொல்லி இருப்பார் என்று கூறி இருந்தார்.

வனிதாவின் பதிவு :

இப்படி ஒரு நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ”மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். Karma யாரையும் சும்மா விடாது. அதற்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவை ரவீந்தரை குறிப்பிட்டே வனிதா போட்டு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

வனிதா அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து வனிதா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நான் போட்ட டீவ்ட் குறித்து பல சர்ச்சை எழுந்து இருக்கிறது. உண்மையிலேயே, நான் மனசார ரவீந்திரன்- மகாலட்சுமி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அதை நான் எதார்த்தமாக போட்டது. அவர்களை மட்டும் குறிப்பிடவில்லை பொதுவாக போட்டது. அது அவர்களுக்கும் தொடர்புடையதாக மாறிவிட்டது. கர்மா யாரையும் சும்மா விடாது என்பது நான் என் வாழ்க்கையிலேயே நிறைய பார்த்து விட்டேன்.

https://www.youtube.com/watch?v=5Sq_EMwHa_Y

பேட்டிக்கு காசு வாங்கி இருக்கும் வனிதா :

என்னைக்குமே ஒரு விஷயம் நம்ம பண்ணும் போது அது மற்றவர்களை பாதிக்கும் என்று நாம் யோசிப்பது கிடையாது. தேவையில்லாமல் இன்னொருத்தர் லைப்பில் தலையிடக்கூடாது என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய வனிதா, 'அவர் என்னை பேட்டி எடுத்த போது காசு வாங்கி கொண்டுதான் போனேன். ஆனால், அந்த பேட்டியை அவர் இன்னும் வெளியிடவில்லை. உனக்கு தைரியம் இருந்த இப்போ அந்த பேட்டியை வெளியீடு ரவீந்தர்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full