காதலில் தோற்பதே எனக்கு பழக்கமாகிடிச்சி - பீட்டர் பவுல் விஷயத்தில் வனிதா அளித்த நீண்ட விளக்கம்.
நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா மற்றும் பீட்டர் பவுலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின அதுவும் பீட்டர் பால் குடித்துவிட்டு அவளிடம் பிரச்சனை செய்ததால் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார் என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் கூட தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதேபோல பல்வேறு இணைய தளங்களில் கூட வனிதா பீட்டர் பவுல் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார் வனிதா.
https://twitter.com/vanithavijayku1/status/1318316696126382081
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், என்னுடை வீட்டை நான் சிதைத்து விட்டேன் என்று நினைப்பவர்களுக்கு, என்னுடைய வீட்டை, பல ஆண்டுகளாக குடும்பம் மற்றும் வீடு இல்லாத நபரை வைத்து உருவாக்கினேன். அவருக்கு வலிகள் இருந்தது அதே போலத்தான் எனக்கும். கொரோனா பேரிடர் முதல் மீடியாக்கள் வேண்டுமென்றே எங்கள் வாழ்க்கையில் செய்த சில சர்க்கஸ் வரை நாங்கள் இருவரும் மோசமான நேரங்களில் சிரித்து காதலித்து வாழ்ந்தோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று நினைத்தோம். அதன் பின்னர்தான் உடல் நல குறையவால் ஒரு பயம் ஏற்பட்டது. ஒரே மாதத்தில் அவரை இரண்டு முறை நான் இழக்க நேரிட்டது. அது மிகவும் மோசமான ஒரு வலி. ஆனால், அவரை இரண்டு முறை காப்பாற்றி விட்டதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
நாம் விரும்புவோருக்கு ஏதாவது ஒரு உடல்நல குறைவு ஏற்பட்டாலும் அல்லது அதிலிருந்து மீண்டு வந்தாலும் அப்போது வாழ்க்கை மாறுகிறது. அவரை நினைத்து எப்போதும் நான் வருத்தமாக இருந்தேன். அவர் மீது அக்கறை காட்டுவது தான் வேலையாக இருந்தது. அவரை பிரியும் வலியை என்னால் ஏற்க முடியவில்லை. இன்றும் அதே வலியுடன் தான் இருக்கிறேன். ஒரு சில சுயநலமான மனிதர்கள் இதை வைத்து பணம் மற்றும் புகழை தேடுகிறார்கள். இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிப்பது வலியை கொடுக்கிறது. மற்றவர்கள் வலியிலிருந்து அவர்கள் மகிழ்ச்சியை . தேடுகிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டதை அனைத்தையும் மறைக்காமல் சொல்லும் நேர்மையான நபர் நான். எதையும் நான் மறைக்கவில்லை, மறைப்பதற்கு எதுவும் கிடையாது. உங்கள் அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது தற்போது நான் மிகப்பெரிய ஒரு சவாலை எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.
இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்க முயற்சி செய்கிறேன். வாழ்வா சாவா என்று ஒரு நிலையில் இருக்கிறேன். அன்பு ஒன்றுதான் நான் விரும்புவது, ஆனால் அது என்னிடமிருந்து சென்றுவிடும் என்று பயப்படுகிறேன். இந்த சவாலை என்னுடைய வேலை மற்றும் குழந்தைகளை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் நான் எதிர் கொள்வேன். என்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து கொண்டு இருக்கிறது. இது ஒன்றும் எனக்கு புதிதானது இல்லை. காதலில் தோற்பது என்பது எனக்கு பழக்கமாகிவிட்டது. ஆனால், அதையெல்லாம் கடந்து நான் மேலும் நலமாக இருக்கிறேன்.
காதலை நம்பி அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள் தரக்கூடிய வலி மிகவும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு வலி. உங்கள் கண்முன்னாலேயே உங்கள் வாழ்க்கையை தொலைப்பது என்பது மிகவும் வலி தரக்கூடியது. அதை என்னுடைய கட்டுப்பாடு இல்லாமலேயே எதிர்கொள்ள வேண்டும். ஆனால், இது நடந்து இருக்காமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்று நான் சொல்ல விரும்பவில்லை.ஏனென்றால் வாழ்க்கை என்பது ஒரு பாடம் அதில் நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனவே பொய்யான செய்திகளை படித்துவிட்டு என்னிடம் வராதீர்கள்.
நான் எந்தத் தவறையும் இதுவரை செய்யவில்லை எனவே என்னை தவறாக பேசுவோ கேலி செய்யவும் நான் தகுதியானவர் இல்லை. தேவைப்பட்ட ஒருவருக்கு என்னுடைய அன்பை கொடுத்தேன் என்னுடைய வாழ்க்கையில் வைத்திருந்த கனவு மற்றும் நம்பிக்கை உடையும் நிலையில் நான் இருக்கிறேன் . தற்போதும் நான் உறுதியாகத் தான் இருக்கிறேன். ஆனால் என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம் என்பதால் இதை ஏற்க முடியாத சூழலில் இருக்கிறேன். நான் வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்த ஒரு தைரியமான பெண். எனவே, இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன். எனவே இதுகுறித்து எதையும் பேசாதீர்கள் அது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அன்பு ஒன்றுதான் என்னை நொறுக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. இது என்னுடைய வாழ்க்கை அதை நான் தான் சந்திக்க வேண்டும் எனவே யாரிடமும் எதைப்பற்றியும் நான் தெளிவு படுத்த தேவையில்லை. என்னுடைய துணை குறித்து தவறாக பேசி அதன் மூலம் வரும் அனுதாபத்தை வைத்து என்னை நல்லவள் போல காட்டிக் கொள்ளும் நபர் நான் இல்லை.
இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. என்னுடைய பிள்ளைகள் மற்றும் என்னை சுற்றி இருக்கும் நபர்களை மனதில் வைத்து நான் சரியான முடிவை எடுப்பேன். ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும் என்று பிரார்த்திக்கிறேன் ஒருவேளை அது நடக்கவில்லை என்றாலும் அதையும் நான் எதிர் கொள்வேன். வாழ்க்கையில் அனைத்தையும் கடந்து செல்லவேண்டும் எதுவும் என்னை உடைக்க முடியாது. அனைத்திற்கும் மேலாக இதுவரை நான் விட்டுக் கொடுக்கவும் இல்லை' என்று கூறியுள்ளார் வனிதா. வனிதா இந்த பதிவின் மூலம் குழம்பியுள்ள ரசிகர்கள் பீட்டர் பவுலை பிரிந்துவிட்டாரா அல்லது விரைவில் அவரை பிரிய போவதற்கான முடிவை எடுக்கப் போகிறாரா என்ற ஒரு சந்தேகத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் கண்டிப்பாக வனிதா மற்றும் பீட்டர் பவுல் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்பது வனிதாவின் இந்த நீண்ட பதிவின் மூலம் தெளிவாக தெரிகிறது