முற்றிய மோதல் - இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட சூர்யா தேவி. வீடியோ இதோ.

By Rajkumar · 23/7/2020

சமூக வளைதளத்தில் எந்த பக்கத்தை புரட்டி பார்த்தால் தற்போது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவின் திருமண சர்ச்சை குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து வனிதாவை திட்டி தீர்த்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு வந்தார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி மீது வனிதா அணிந்திருந்த புகாரின் பேரில் தற்போது சூர்யா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்

https://www.youtube.com/watch?v=hqLkrB_jhDs

வனிதா அளித்த அந்த புகாரில தனது திருமணம் குறித்தும், தனது கணவர் குறித்தும் சூர்யாதேவி என்ற பெண் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு, அவதூறு பரப்பி வருவதாகவும். மேலும் சூர்யா தேவி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வனிதா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் சூர்யாதேவியை நேற்று (ஜூலை 22) இரவோடு இரவாக கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். வனிதா விஜயகுமார், சூர்யா தேவி என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும், நடிகை வனிதா விஜயகுமார் மீது சூரியா தேவியால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இரண்டு தரப்பினரிடமும் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

https://www.youtube.com/watch?v=x9qM50rB3Jk

இதனால் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர். இந்த விசாரணையின் போது சூர்யா தேவி வனிதாவை மன்னிப்பு கேட்க சொன்னதாகவும் அதேபோல வனிதாவும் சூர்யா தேவியை மன்னிப்பு கேட்க சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது ஆனால் இருவருமே மன்னிப்பு கேட்காததால் போலீசார் சூர்யா தேவியை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர் ஆனால் அதன் பின்னரும் சூர்யா தேவி தொடர்ந்து வனிதா குறித்து வீடியோவை பதிவிட்டு வந்தார்

behindtalkies AMP · Quick view
View full