ஜோவிகா ஆகாஷ் பொண்ணும் இல்ல, என் பொண்ணும் இல்ல - வனிதாவின் முன்னாள் கணவரின் பழைய பேட்டி தற்போது வைரல்.

By Rajkumar · 8/10/2023

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் படிப்பு குறித்து வனிதாவிற்கும் - விசித்ராவிற்கும் நடந்த வாக்குவாதம் தான் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து பேசிய வனிதா 'எந்த நிலையிலும் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறுகின்றேன் இது படித்திருக்கிறேன் தற்பொழுது கொண்டிருக்கின்றேன் என்று எதுவும் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தேன். நான் ஜோவிகாவிடம் கூறியதும் இதுதான் நீ படிப்பு வரவில்லை என்று வீட்டில் அமர்ந்து கொண்டு AC போட்டுக் கொண்டு சும்மா இருக்கவில்லை நீ உனக்கு பிடித்தது செய்து கொண்டு இருக்கிராய்.

https://twitter.com/vanithavijayku1/status/1710368007908917486

இந்த குழந்தைக்கு படிப்பு வரவில்லை அதற்கு பிடிக்கவில்லை. அந்த சத்தம் பிடிக்கவில்லை. அதற்கு மண்டையில் ஏறவில்லை நானும் அன்பால் புரிந்து கொள்ள வைப்பதற்கு முயற்சி செய்தேன் ஆனால் என்னால் முடியவில்லைஎன்னுடைய பிசினஸ் அவருக்கு முக்கியமில்ல அவருடைய கேரியர் தான் எனக்கு முக்கியம். அதனாலதான் நான் அவளை நான் இயக்குனர் பார்த்திபனிடம் சேர்த்துவிட்டேன்.

நான் என் மகளை இரவு 10:00 மணி ஆனாலும் ஆட்டோவில் தான் பயணம் செய்ய சொல்லுவேன். எங்களிடமிருந்து 2 கார்கள் உள்ளது ஆனால் ஒரு அசிஸ்டெண்ட் என்பவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் போது காரில் இறங்க கூடாது. பஸ் ஏரியோ அல்லது மெட்ரோவில் சென்றால் தான் அசிஸ்டன்ட் டைரக்டருக்கு வலி அவளுக்கு புரியும். அவள் அங்கு சிறப்பாக செயல்பட்டதால் பார்த்திபன் அவரை பிக் பாஸ் முடித்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=JOhlAHstw-E&t=307s

மேலும் கூறுகையில் அனைவரும் சர்ப்ரைஸ் ஆன விஷயம் என்னவென்றால் ஜோவிகா பிக் பாஸ் செல்லும் முன்னரே இரண்டு படங்களில் ஹீரோயினியாக நடிக்கவும் கமிட்டாகி பின்னர் தான் பிக் பாஸ்க்கு சென்றுள்ளதாகவும் வனிதா கூறி இருந்தார். அதில் ஒரு தமிழ் படம் மற்றும் தெலுங்கு படம் என்றும் வனிதா கூறி இருந்தார். அதே போல ஜோவிகா சிறு வயதில் தமிழில் பாடம் கற்கும் வீடியோ ஒன்றை அவரது தந்தை அனுப்பியதாக வீடியோ ஒன்றையம் பதிவிட்டு இருந்தார் வனிதா.

இப்படி ஒரு நிலையில் வனிதாவின் முன்னாள் கணவரான ராஜன் என்பவர் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள அவர் 'வனிதாவின் ஒட்டுமொத்த குடும்பமே படிப்பறிவு இல்லாதவர் தான். வனிதா எட்டாவது கூட படிக்கல, ஸ்ரீதேவி ஐந்தாவது கூட படிக்கல, ப்ரீத்தா படிக்கல. எல்லாரும் டிகிரி வாங்கி வச்சிக்கிட்டாங்க.

மேலும், பேசியுள்ள அவர் ஜோவிகா ஆகாஷ் மகளும் இல்ல என் மகளும் இல்ல. அவ ஆகாஷுடன் விவாகரத்து ஆன பின்னர் ஐடி வேலை செய்த அருணன் என்பவருக்கு பிறந்தவர் தான் ஜோவிகா. ஆகாஷிற்கு பிறந்தது ஒரே மகன் தான். எனக்கு மகள் கோனிதா மட்டும் தான். அவளை எனக்கு எழுதி கொடுத்துவிட்டால். ஆனால், கொஞ்சம் நாளிலே பள்ளியின் படித்துகொண்டு இருந்த பெண்ணை நான் தான் உன் அம்மா அது இது என்று சொல்லி அழைத்து சென்றுவிட்டால். என் மகளின் படிப்பை கெடுத்ததே அவள் தான் என்று கூறியுள்ளார் ராஜன்.

behindtalkies AMP · Quick view
View full