வனிதாவின் முன்னாள் காதலர் பீட்டர் பவுலா இது ? எப்படி இருக்கார் பாருங்க. புகைப்படம் இதோ.

By Rajkumar · 28/9/2022

வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பாலின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் - மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து இவர் சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். பின் கடந்த ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்திருந்தது. அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டு இருந்தார்கள்.

வனிதா-பீட்டர் பால் திருமணம்:

ஆனால், திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே வனிதாவிற்கும், பீட்டர் பாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இது குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது. தற்போது வனிதா படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து வனிதா அவர்கள் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

யூடியூப் சேனல்:

அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொல்லப்போனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

பீட்டர் பால் லேட்டஸ்ட் புகைப்படம்:

இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் குறித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது வேற ஒன்றும் இல்லைங்க, வனிதாவின் பிரிவிற்கு பிறகு பீட்டர் பாலுடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது. அதில் அவருடைய முகம் மிகவும் ஒல்லியாகி எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பது போல இருக்கிறார். இவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே! என்று வருத்தத்துடன் கமெண்ட்களை போட்டு பதிவிட்டு வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full