'அவனை எப்படி திசை திருப்புவது' வனிதாவின் முடிவால் மகன் சந்தித்து வரும் பிரச்சனை - மனம் வருந்தியுள்ள வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ்.
வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமணம் பற்றிய செய்திகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதேபோல இவரது முதல் கணவரான ஆகாஷுக்கும் வனிதாவிற்கும் பிறந்த மகன் ஸ்ரீஹரியால் ஏற்பட்ட பிரச்சினைகளும் ஏராளம். இந்த பிரச்சனைகளால் தான் வனிதா குடும்பத்திற்கும வனிதா விற்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வெடித்தது.
வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரா அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
இதையும் பாருங்க : கங்குலி பிறந்தநாளுக்கு நக்மா பதிவிட்ட பதிவு - பங்கமாக கலாய்த்த ரசிகர்கள். கடுப்பாகி நக்மா செய்த விஷயம்.
அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.இதையடுத்து மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று தரவிடபட்டது. தற்போது ஆகாஷ் சினிமாவில் நடிப்பதைவிட்டு விட்டு தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாராம். இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து ஆகாஷ் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவருடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் சிலர் கூறியுள்ளதாவது, விவாகரத்திற்கு பின்னர் அவர்கள் யாரோ நாங்கள் யாரோ என்று நானும் என் மகனும் ஒதுங்கி விட்டோம்.
தற்போது ஸ்ரீ ஹரிக்கு 23 வயதாகிறது அவனின் நண்பர்கள் வட்டாரத்தில் எல்லோருக்கும் இந்த விஷயம் தெரியும் என்பதால் அவன் நண்பர்களிடம் நெருங்கி பழகுவது கூட குறைத்து விட்டான். மேலும், ஒரு சிலர் அவன் இருக்கும்போது அவங்க தொடர்பான விஷயங்களை பேசுவதில்லை. ஆனாலும், இவன் மிகவும் தர்மசங்கடத்தோடு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றான். ரொம்பவே மன அழுத்தத்தில் இருக்கிறான். சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் போட்டாலே அடையாளம் கண்டுபிடித்து ஏதாவது கேட்பார்கள் என்று அந்த பக்கமே வருவது கிடையாது. வளர்ந்த பையனுடைய ஒரு அப்பாவாக இந்த விஷயத்தில் நான் அவனுக்கு என்ன சொல்லி அவனை திசை திருப்புவது என்று தெரியவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளாராம் ஆகாஷ்.