வனிதாவுக்கு டொனால்ட் ட்ராம்ப் சார்பாக வந்துள்ள பரிசு. அட உண்மை தாங்க.

By Rajkumar · 19/8/2020

பிரபல நடிகையான மனிதன் அவருக்கு பெரிதாக அறிமுகம் தேவை கிடையாது பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா, விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா ஆரம்பத்தில் ரசிகர்களின் மத்தியில் கெட்ட பெயரை எடுத்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று அதற்கு முழு காரணம் என்னவோ வனிதா தான். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பாக கொண்டு சென்றிருந்தார் வனிதா.

https://www.instagram.com/p/CEEgI-9jrQL/

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இடையில் வெளியேறிய பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. அதன் பின்னர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவி வனிதாவை தக்கவைத்துக்கொண்டு கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறச் செய்தனர். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து தனியாக ஒரு யூடியூப் சேனலை கூட ஆரம்பித்து இருந்தார்.

ஆனால், வனிதா மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது என்னவோ பீட்டர் பவுல் விஷயத்தில்தான். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதாவிற்கு மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டர் பவுல் விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டது தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது .அந்த விஷயம் கடந்த சில வாரங்களாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

தற்போது வனிதா மற்றும் பீட்டர் பவுல் விஷயம் சமூக வலைதளத்தில் அடங்கியுள்ள நிலையில் வனிதா பீட்டர் பவுலுடன் தனது வீட்டில் வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் வனிதா மற்றும் பீட்டர் பவுலுக்கு அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சார்பாக ஒரு பரிசு ஒன்று வந்திருக்கிறது. அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்துப் போட்டு பரிசு அளிக்கும் வகையில் என்ன செய்தார் என்று தான் தெரியவில்லை. இது குறித்து வனிதாவே விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full