எல்லா மகள்களும் தந்தையின் ராணி கிடையாது - மகளின் திருமணத்திற்கு கூட அழைக்காத தங்கை. வனிதா போட்ட சூசக பதிவு.

By Arun · 19/2/2024

அனிதா மகள் தியா திருமணத்திற்கு தன்னை யாரும் அழைக்காதது தொடர்பாக வனிதா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. விஜயகுமார்-மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார்.

விஜயகுமார் குடும்பம்:

மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். தற்போது விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தையும், கேரியரையும் கவனித்து வருகிறார். மேலும், அருண் விஜய்யின் அக்கா கவிதா அவர்கள் சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். கவிதாவின் முதல் பொண்ணு தான் ஹாசினி. இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

அனிதா விஜயகுமார் குறித்த தகவல்:

இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் அனிதா. இந்த நிலையில் கடந்த ஆண்டு அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. அதில் விஜயகுமார் உடைய மகன், மகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லோரும் கலந்து கொண்டு இருந்தார்கள். தன்னுடைய மகளின் திருமணத்தை முன்னிட்டு வீட்டையே மலர்களால் அனிதா அலங்கரித்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி இருந்தது.

அனிதா மகளின் திருமணம் :

அதுமட்டுமில்லாமல் விஜயகுமார் குடும்பத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு விசேஷம் என்றாலும் ஒன்று கூடி வருவார்கள். தற்போது மொத்த குடும்பமே திருமண வேளையில் பிஸியாக இருக்கின்றார்கள்.இதற்காக கடந்த சில தினங்களாக மெஹந்தி பங்ஷன், சங்கீத் பங்ஷன், ஹல்தி பங்ஷன் என திருவிழா போல் விஜயகுமார் வீடு இருந்தது. இன்று தியாவின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. பலருமே தியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். வழக்கம்போல் வனிதா தான் இந்த விசேஷத்தில் கலந்து கொள்ளவில்லை.

வனிதா பதிவு:

இந்த நிலையில் தியா திருமணத்திற்கு தன்னை யாரும் அழைக்காதது குறித்து வனிதா கொடுத்து இருக்கும் பதிலடிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சிங்கம் நடந்து வருவது போன்ற வீடியோவை பதிவிட்டு ஒட்டுமொத்த கூட்டம் ஒரு இடத்தில் சேரும்போது நீங்கள் மட்டும் தனியா இருந்தால் நீங்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் மற்றொரு பதிவில் எல்லா மகள்களும் தந்தையின் ராணி கிடையாது, சில அம்மாக்கள் போராளிகள் என்றும் பதிவிட்டுள்ளார். இப்படி இவர் கூறியிருப்பதன் காரணம் தன்னை ஒதுக்கிய மொத்த குடும்பத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் போட்டிருக்கிறார் .

Tamil Behind Talkies AMP · Quick view
View full