சமந்தா, ரெஜினாவை தொடர்ந்து ஐட்டம் டான்ஸ் ஆடிய வனிதா - வைரலாகும் வீடியோ (இதுல எதுக்கு சமந்தா போட்டோ போட்டாங்க ?)

By Rajkumar · 22/1/2022

சமந்தா, ரெஜினாவை அடுத்து ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய வனிதாவின் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் இவர் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார்.

அதற்கு பிறகு இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. அதோடு இவரை பலரும் வத்திக்குச்சி வனிதா என்று தான் அலைகிறார்கள். மேலும், வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமந்தா, ரெஜினாவை ஓரம் கட்டும் அளவிற்கு வனிதா ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சமந்தா-ரெஜினா ஐட்டம் பாடல்:

சமிபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு சமந்தா படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு இருந்தார். அதேபோல் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு காஜல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

வனிதாவின் ஐட்டம் பாடல் வீடியோ:

இந்த படத்தில் ஐட்டம் பாடலுக்கு ரெஜினா செம்ம நடனம் ஆடி இருக்கிறார். இந்த இரண்டு பாடல்களுமே சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலானதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் சமந்தா, ரெஜினாவை அடுத்து தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றுக்காக நடிகை வனிதா ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். அவர் காத்து. இந்த படத்தை தவசிராஜன் இயக்கி தயாரித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு வனிதா செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வனிதா அளித்த பேட்டி:

இது குறித்து வனிதா அவர்கள் கூறியிருப்பது, இது தான் என்னுடைய முதல் ஐட்டம் டான்ஸ். கலர் கோழி குஞ்சு என்று இந்த பாடல் தொடங்கும். இந்த பாடலை கானா பாலா பாடி உள்ளார் என்று கூறியிருந்தார். இவருடைய பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களையும், வழக்கம்போல் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் தற்போது அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொள்ள இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=7nGvlhsEhlk

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு தான் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து விஜய் டிவி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். இது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். அதே போல இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவரை வனிதா, ஜூலி, அனிதா சம்பத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்களாம். மேலும் , இந்த நிகழ்ச்சி 70 நாட்கள் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full