நீங்களே இப்படி சொல்வீங்கன்னு எதிர் பாக்கல - ரவீந்தரனின் பேட்டியை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.
கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. இப்படி ஒரு நிலையில் திருமணம் ஆகி ஏற்கனவே இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக இருந்த பீட்டர் பவுலை வனிதா திருமணம் செய்து கொண்டார்.
மேலும், பீட்டரின் முதல் மனைவி எலிசபத் வட பழனி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். ஆரம்பத்தில் தனது திருமணம் குறித்து அறிவித்த போது பெரும்பாலான நபர்கள் வனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், வனிதா திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகவில்லை என்று தெரிந்ததும். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பலவிதமான விமர்சனங்கள் வந்தன .
அவ்வளவு ஏன் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குட்டி பத்மினி போன்றவர்கள் கூட வனிதாவுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் வழக்கம்போல அவர்களையும் திட்டி தீர்த்து வனிதா ட்வீட் செய்து இருந்ததால் அவர்கள் இருவருமே மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனால், இந்த விவகாரத்தில் ரவீந்திரன் தான் கடைசி வரை எலிசபத் குடும்பத்திற்காக பேசி இருந்தார். மேலும், எலிசபத் குடும்பத்திற்கு உதவிகளையும் செய்து வந்தார்.
ஆனால், சமீபத்தில் இனி வனிதா விஷயத்தில் இனி பேச மாட்டேன் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் ரவீந்திரன் ஆரம்பித்துள்ள Fact man Facts என்ற யூடுயூப் சேனலில் வனிதாவை அழைத்து பேட்டி எடுத்துள்ளார். ஆனால், அந்த பேட்டியில் இருவருக்கும் எதுவும் நடக்காதது போல பேசியதை கண்டு ரசிகர்கள் பலரும் அப்சட் அடைந்துள்ளனர். மேலும், ரவீந்திரனை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.