60 வயதில் 4ஆம் திருமணம் செய்த நடிகரின் படத்தில் ரொமான்டிக் காட்சியில் வனிதா - அவரே பகிர்ந்த தியேட்டர் ரெஸ்பான்ஸ் வீடியோவை

By Rajkumar · 28/5/2023

வயதான நடிகருடன் வனிதா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார்.

திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

வனிதா நடிக்கும் படங்கள்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் வனிதா பிசியாக நடித்து வருகிறார்.

View this post on Instagram

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

வனிதாவின் யூடியூப் சேனல் :

மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் வயதான நடிகருடன் வனிதா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

வனிதா நடித்த தெலுங்கு படம்:

தற்போது நடிகை வனிதா அவர்கள் தெலுங்கில் வெளியான மல்லிபெல்லி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நரேஷ் விஜய்கிருஷ்ணா, பவித்ரா லோகேஷ், ஜெயசுதா, சரத் பாபு, வனிதா விஜய் குமார், அனன்யா நாகல்லா, ரோஷன், ரவி வர்மா, அன்னபூர்ணா, பத்ரம், யுக்தா, பிரவீன் யண்டமுரி, மது உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும்,, இந்தப் படத்தில் வனிதாமூத்த நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

வனிதா பதிவு:

அதில் அவர், மல்லிபெல்லி படத்தை திரையரங்களில் பாருங்கள். குடும்ப நாடகப் பொழுதுபோக்கு. குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்றப்படும். என் கதாபாத்திரம் தியேட்டரில் அட்டகாசமான ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. நன்றி படத்தின் மிஸ்டேக் அத்தியாயத்தை தவறவிடக்கூடாது என்று படம் குறித்து பெருமையாக வனிதா பேசி இருக்கிறார். தற்போது வனிதா பதிவிட்ட அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.நடிகர் நரேஷ் 4வதாக நடிகை பவித்ராவை தனது 60வது வயதில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டது ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடதக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full