கேரவன்ல ஒக்காந்து சரக்க போட்டுத்தான் பிக் பாஸ் வீட்டுக்கே போனாங்க, விடீயோவ நான் விடட்டா ? - வெளுத்து வாங்கிய நாஞ்சில் விஜயன்.

By Rajkumar · 15/7/2020

தன்னை சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்கள் மீது வனிதா போலீசில் புகார் அளித்துள்ளார். ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி குறித்து பேசிய வனிதா, அவள் ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார் வனிதா.மேலும், வனிதாவின் வழக்கறிஞர் பேசுகையில், அவள் ஒரு கஞ்சா வியாபாரி. அவள் வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. அவள் செய்யும் தப்பை மறைக்க தான் தற்போது இது போன்று எல்லாம் பேசி வருகிறாள்.

மேலும், அவளை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், தனது யூடுயூப் சேனலில் சூர்யா தேவியை பேட்டி எடுத்து போட்டிருந்தார். அப்போது நாஞ்சில் விஜயன், வனிதா குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார்.இப்படி ஒரு நிலையில் தான் நாஞ்சில் விஜயனுக்கு சூர்யா தேவிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தார் வனிதா. இந்த நிலையில் வனிதாவின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ளார் நாஞ்சில் விஜயன்.

https://www.youtube.com/watch?v=LQlW7HiNTZ8&feature=youtu.be

சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் என்ற வீடியோ எடுத்துக் கொண்டாள். ஆனால், தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சினைக்கு பின்னர் அவளது நம்பரை கூட நான் பிளாக் செய்து விட்டேன். வனிதா விஷயத்தை பற்றி கேட்க தான் அவளுக்கு போன் செய்து பேட்டி எடுத்தேன். தற்போது அவளுடன் டிக் டாக் செய்த வீடியோவை எடுத்து எனக்கும் அவளுடன் தொடர்பு இருப்பது என்று கூறுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

நான் வனிதாவுடன் கூடத்தான் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். அப்போது நான் என்ன வனிதாவின் ஐந்தாவது கணவர் என்று சொல்வார்களா என்ன. வனிதா கலாச்சாரம் பற்றியெல்லாம் பேச தகுதியே கிடையாது. அவர் பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சிகரெட் பிடித்தார் என்று நான் எப்போதாவது சொல்லி இருக்கிறேனா. அவ்வளவு ஏன் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பாக கேரவனில் அமர்ந்து அவர் சரக்கு அடித்து விட்டு தான் சென்றார். மேலும், அவர் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் வீடியோ கூட என்னிடம் இருக்கிறது அதை எல்லாம் நான் வெளியிடட்டுமா ? என்று ஷாக் கொடுத்திருக்கிறார் நாஞ்சில் விஜயன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full