பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் அர்ச்சனாவிடம் நடந்த ரகளை. பாதியில் வெளியேறிய வனிதா.என்ன நடந்தது?

By subhashini · 16/1/2024

பிக் பாஸ் 7 பைனல் நிகழ்ச்சியில் நடந்த ரகளை குறித்து வனிதா கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்களில் கடந்த ஞாயிறு கிழமை கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. ஞாயிறு மாலை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார்.

பிக் பாஸ் 7

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

வனிதா ரிவியூ:

இந்நிலையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி குறித்து வனிதா தன்னுடைய கடைசி ரிவியூவை போட்டு இருக்கிறார். அதில் அவர், அர்ச்சனா வெற்றி பெற்றதை என்னால் நம்பவே முடியவில்லை. அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஜனநாயகம் இல்லை பனநாயகம் தான் வென்றது. இரண்டுமே விஜய் டிவி ப்ராடக்ட் தான். இதில் மாயா பெயரை யூஸ் பண்ணி குரேஷி, புகழ் போட்ட வீடியோ எல்லாம் வைரலாகி இருந்தது. இதற்கு கமல் சாரிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள்.

அர்ச்சனா குறித்து சொன்னது:

ஆனால், ஏன் மாயாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை? அவர்களை நேரில் பார்க்கும் போது இதைப் பற்றி நான் கேட்பேன். ஒரு பொண்ணு பத்தி பேசுறது சரியே இல்லை. எந்த சீசனிலுமே இப்படி நான் வெறுப்பாகவில்லை. வின்னர் அறிவிக்கும்போது நான் வெளியில் வந்து விட்டேன். வீட்டில் இருப்பவர்கள் யாருமே அர்ச்சனாவை ஏற்றுக் கொள்ளவில்லை. எந்திரன் படத்தில் கடைசியில் எல்லா ரோபோவும் சேரும் இல்ல. அதுபோல பாட்களால் அர்ச்சனா வெற்றி பெற்றது கமலாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அங்கு பெரிய சண்டையே நடந்தது, ரொம்ப பிரச்சனையானது.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

ரசிகர்கள் கிண்டல்:

என்னுடைய பொண்ணு அப்படி கமலிடம் நடந்து கொண்டால் நான் சப்போர்ட் செய்ய மாட்டேன். என்னால் அதை சொல்ல முடியாது. அங்கிருந்து எல்லோரும் என்னிடம் பேசினார்கள். விசித்திரா செம கடுப்பில் இருந்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே கடுப்பாகி என் அம்மா சத்தியமாக நான் கிளம்பி வந்து விட்டேன். மணிக்கு டைட்டில் பட்டம் கொடுத்திருந்தால் கூட ஓகேவா இருப்பேன் என்று பேசி இருந்தார். இப்படி வனிதா பேசியதை ரசிகர்கள் பலரும் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full