பீட்டர் பவுல் பேட்டி கொடுத்த அதே இடத்தில் பீட்டரின் தயாரிப்பாளரை பேட்டி எடுத்த கஸ்தூரி. பல உண்மைகள் வெளிவந்திருக்கு.

By Rajkumar · 21/7/2020

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா தற்போது ஏற்கனவே திருமணமான பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டர் பவுல் தனது முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதா திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணமும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=uwUg8diIWmU&t=133s

அதிலும் பீட்டர் பவுல் மற்றும் வனிதா கொடுத்த பேட்டி மூலம் பல்வேறு உண்மைகள் அம்பலமாகி இருக்கிறது. சமீபத்தில் வனிதாவுடன் பீட்டர் இணைந்து கொடுத்த பேட்டி இடம்பெற்ற அந்த குறிப்பிட்ட இடம் பீட்டரின் அலுவலகம் கிடையாது. அது உண்மையில் பீட்டர் இயக்குவதாக கூறி வந்த பாலிவுட் கதையின் தயாரிப்பாளரின் அலுவலகம். ஆனால், பீட்டர் அளித்த பேட்டியில் அந்த அலுவலகம் தன்னுடையது என்பது போலவும் அந்த அலுவலகத்திற்கு தினமும் தான் வந்து சென்று போவதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் உண்மையில் கடந்த சில காலமாக அவரை அந்த அலுவலகத்தின் வாசி கூட சேர்ப்பது கிடையாதாம் அது என்னவெனில் பீட்டர் இயக்குவதாக கூறியிருந்த அந்த பாலிவுட் கதையை தயாரித்து இருந்த தயாரிப்பாளரிடம் பீட்டர் கதையை சரியாக கூறாமல் இருந்ததால் அந்த படம் கைநழுவி இருக்கிறதாம். இதனால் தயாரிப்பாளர்கள் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒருமுறை இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இனி பீட்டரை அலுவலகத்தின் பக்கமே வரக்கூடாது என்று தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். அப்படியே பீட்டர் வந்தாலும் அவரை கேட்டிற்கு வெளியிலேயே நிற்க வைத்துவிட்டு தயாரிப்பாளர் சென்று பேசிவிட்டு வருவாராம்.

https://www.youtube.com/watch?v=Scg-eqW4TPI&t=87s

இந்த நிலையில் பீட்டர் பவுல் மற்றும் வனிதா இருவரும் பேட்டி கொடுத்த அதே அலுவலகத்தில் கஸ்தூரி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பீட்டர் பவுலின் துணை இயக்குனர் குறிப்பிட்ட தயாரிப்பாளரான அப்சா மைதீன் அந்த பேட்டியில் பங்கேற்றுள்ளார். மேலும், அந்த பேட்டியில் பீட்டர் பவுல் பற்றி பல்வேறு உண்மைகளை கூறியுள்ளார் அப்சா மைதீன்.

behindtalkies AMP · Quick view
View full