நாஞ்சில் விஜயன் மட்டும் தான் போட்டோ விடுவாரா - வனிதா விட்டுருக்காங்க பாருங்க நாஞ்சில் விஜயனின் ரகசிய போட்டோ.
வனிதாவின் திருமண சர்ச்சை தான் கடந்த சில வாரமாக வே சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக இருந்து வந்தது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா,திருமணம் ஆகி விவாகரத்து பெறாமல் இருந்த பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்தது குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தயாரிப்பாளர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி, கஸ்தூரி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதில் சூர்யா தேவியுடன் பேட்டி எடுத்து வனிதாவின் திருமண பஞ்சாயத்தில் மாட்டியவர் தான் நாஞ்சில் விஜயன்.
வனிதா விஷயத்தில் லட்சுமிராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் கஸ்தூரி போன்றவர்கள் கருத்து கூறுவதை கொஞ்சம் நிறுத்திவிட்ட நிலையில் நாஞ்சில் விஜயன் மட்டும் வனிதா விஷயத்தை விடுவதாக இல்லை. தொடர்ந்து வனிதா குறித்து சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட வனிதாவை பற்றி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அந்த வீடியோவை தனது யூடுயூப் சேனலில் வெளியிட்டு இருந்தார்.
மேலும் அந்த வீடியோவில் பலரும் வனிதாவை பற்றி கழுவி ஊற்றினார்கள். இந்த வீடியோவை பார்த்து கடுப்பான வனிதா, நாஞ்சில் விஜயனக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி இருவரும் கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே நாஞ்சில் விஜயன் இதேபோல வனிதா தனது நண்பருடன் மது கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/vanithavijayku1/status/1289484194905600001
அந்தப் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ அந்த நபர் யார் என்று பலரும் குழம்பி இருந்த நிலையில் அதற்கு வனிதா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்திருந்தார் அதில் அந்த நபர் தனது குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நபர் என்றும் தனது குடும்பத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களது கொண்டிருக்கிறார் என்றும் கூறியிருந்தார். மேலும் அவருடன் இருக்கும் சில புகைப்படங்களை கூட வனிதா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.