தொடர்ந்து குவிந்த எதிர்ப்புகள். வனிதா எடுத்த திடீர் முடிவு. சிங்கப்பெண்ணை இப்படி ஆக்கிட்டீங்களே.

By Rajkumar · 21/7/2020

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா தற்போது ஏற்கனவே திருமணமான பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டர் பவுல் தனது முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதா திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணமும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பீட்டர் பவுல் மீது ஏற்கனவே பீட்டர் பவுலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த பிரச்சினை ஒரு புறம் சென்று கொண்டிருக்க, வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண பிரச்சனையில் பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து விஷயத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவர்களை தொடர்ந்து சூர்யா தேவி., லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி என்று பலரும் இந்த பிரச்சனையில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

ஆனால், இவர்கள் அனைவரையும் திட்டி தீர்த்து தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் வனிதா. அதிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா லைவ் பேட்டியில் தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த பின்னர் இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து வனிதாவுக்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்

இந்நிலையில், தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது, டுவிட்டரில் இருந்து அவர் திடீரென விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது. வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. ஆனால், வனிதா குறித்து கஸ்தூரி, நாஞ்சில் விஜயன் என்று பலரும் கிழித்து தொங்கவிட்டு தான் வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full