என்னது மறுபடியும் திருமணமா ? நான்காம் திருமணம் குறித்து வனிதா விளக்கம்.

By Rajkumar · 10/6/2021

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா பல ஆண்டுகளுக்கு பின்னர் கதாநாயகியாக களமிறங்க இருக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள்.

https://www.youtube.com/watch?v=_gGhxuAhl30&t=61s

அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் பிரிந்தார். நடிகை வனிதா சந்திரலேகா படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார்.

இதையும் பாருங்க : முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு - சர்ச்சை கமென்டிற்கு விசித்ரா கொடுத்த பதிலடி.

பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரீ-என்ட்ரியை கொடுத்தது. அதன் பின்னர் நடிகை வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், அவருடனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்.

இப்படி ஒரு நிலையில் வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், அவர் ஒரு பைலட் என்றும் 3மாதத்திற்கு ஒரு முறை தான் வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. மேலும், வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் கூட இதனை உறுதி செய்ததாக செய்தி வெளியிடப்பட்டது.

இதனை மறுத்துள்ள வனிதா, என்னைப் பற்றி சினிமா விகடன் தளத்தில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதோடு அப்படி ஒரு நபர் யார் என்றே எனக்குத் தெரியாது. கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட குற்றமா... உடனே அவர்களுக்குத் திருமணம் என யாராவது சொன்னால் அதை செய்தியாக்கிவிடுவது தவறில்லையா? என்னை இந்த செய்தி மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. சினிமா விகடன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதர்க்கு சினிமா விகடனும் மன்னிப்பு தெரிவித்து இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full