ஜோவிகா அப்பா இந்த வீடியோவ அனுப்பி போட சொன்னார் - ஜோவிகாவின் வீடியோவை பதிவிட்டு பதிலடி கொடுத்த வனிதா.
அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டு உள்ளனர்.
https://twitter.com/kollywood0/status/1710357004722872526
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பலர் கலந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் வனிதா மகள் ஜோவிகாவும் ஒருவர். ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாள் அன்றே இந்த நிகழ்ச்சிக்கு வந்தது குறித்தும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஜோதிகா, எனக்கு படிப்பு வராது. படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை.
இதனால் நான் மன அழுத்தத்தில் இருந்தபோது என்னுடைய அம்மா வனிதா தான் நீ என்ன ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார். நான் உடனே நடிகையாக வேண்டும் என்று சொன்னேன். பிறகு என் படிப்பை விட்டு நடிகையாக தேவையான கோர்ஸை எடுத்து படிக்க வைத்தார் என்று பேசிக் கொண்டிருந்தார்.இதைக் கேட்டவுடன் பலருமே ஜோவிகாவிற்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள்.
https://twitter.com/vanithavijayku1/status/1710368007908917486
குறிப்பாக யுகேந்திரன் வாசுதேவன், நீ பேசிக்ஸ் பன்னிரண்டாம் வகுப்பு வரை கண்டிப்பாக படித்து விட வேண்டும். அது ரொம்ப முக்கியம் என்று கூறினார். உடனே விசித்திரா, இல்லை நீ ஒரு டிகிரி ஆவது முடிக்க வேண்டும் என்று சொன்னார். இப்படி மாறி மாறி பலரும் ஜோவிகாவிற்கு அறிவுரையும், சிலர் ஆதரவாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் ஜோவிகா கண்டுகொள்ளாதது போல் தான் இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிலர் தங்களுக்குள் மற்று போட்டியாளர்களுடன் இருக்கும் மனஸ்தாபங்களை பேசி சரி செய்துகொள்ள முயன்றனர். அப்போது ஜோதிகா, பிக் பாஸில் வந்த முதல் நாளே தன்னிடம் விசித்ரா படிப்பு பற்றி பேசியதை கூறி இருந்தார். பின்னர் இது பெரிய விவாதமாக மாற 'நான் டாக்டரோ இஞ்சினியரோ ஆக சொல்லவில்லை ஒரு +2 வாவது முடி என்று தான் சொன்னேன் என்றார்.
https://www.youtube.com/watch?v=tLAWQLxt2m8
அதற்கு ஜோதிகாவோ எனக்கு படிப்பு வரல அதனால எனக்கு ஒன்றும் தெரியாது என்று அர்த்தம் கிடையாது எனக்கு எழுத படிக்க தெரியும் என்று சொன்னதும், எங்க தமிழ்ல எழுதி பாப்போம் என்று கூறினார். இப்படியாக இவர்கள் இருவருக்கும் நடந்த சண்டை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர விசித்திராவிற்கு ஆதரவாக சிலரும் ஜோவிகாவிற்கு ஆதரவாக சிலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் ஜோவிகாவின் அம்மாவான வனிதா, சிறு வயதில் ஜோவிகா தமிழில் பாடம் கற்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் 'ஜோவிகாவின் தந்தை இந்த வீடியோவை எனக்கு அனுப்பி இதை இப்போதே பதிவிட சொன்னார். குழந்தைகளுக்கு எது நல்லது என்று பெற்றோர்களுக்கு தெரியும். அதை புரிந்துகொண்டு அதற்கேற்றார் போல நடந்துகொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.